விஸ்வாசம் தியேட்டர்களில் பெண்கள், பெண்குழந்தைகள் கூட்டம்!! அலை மோதும் ஃ பேமிலி ஆடியன்ஸ்...

By sathish kFirst Published Jan 11, 2019, 7:58 PM IST
Highlights

ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கூட்டம் விஸ்வாசம் படம் ஓடும் தியேட்டரில் பார்க்க முடிகிறது. அதுவும் கூட்டம் கூட்டமாக வருவது படத்தின் வெற்றியை உறுதிப்படுத்தியிருக்கிறது.  

பெற்றோர்களின் ஆசைக்குப் பிள்ளைகளை வளர்க்காமல், பிள்ளைகளின் ஆசைகளுக்கேற்றாற் போல் அவர்களை வளரவிட வேண்டும் என்ற மையக் கருவை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம்.

தல ரசிகர்களை குஷிப்படுத்தவும், குடும்ப ஆடியன்ஸை டார்கெட் பன்னியெடுக்கப்பட்ட விஸ்வாசம் பொங்கலுக்கு ஸ்பெஷலாக வெளியாகி இருக்கிறது.  தல மட்டுமல்ல, லேடி சூப்பர்ஸ்டார்  நயன்தாரா செம்ம கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார், அதுவும் அஜித்துடன் காதல், சண்டை, குழந்தை மீதான பாசம் என ரசிக்க வைக்கிறார்.  

என்னை அறிந்தால் படத்தில் பாசமான போலீஸ் அப்பாவாக பார்த்த அதே அஜித்தை, முற்றிலும் வேறுபட்டு கிராமத்து வெள்ளந்தி அப்பாவாக மகளின் பாசத்திற்காக ஏங்கும் அப்பாவாக நம் கண்களைக் கலங்க வைக்கிறார். நிச்சயம் தூக்குதுரையும், அவரது மகளும் பெண் குழந்தைகளைப் பெற்ற அப்பாக்களுக்கு மறக்க முடியாதவையாக அனுபவத்தை கொடுப்பார்கள்.

நல்லக் குடும்பக் கதையை குடும்பத்தோடு நிம்மதியாக பார்க்கும் வகையில் அதகளமாக இருக்கும் ஆனால் அருவருக்கத்தக்க இரட்டை அர்த்த வசனங்களோ இல்லை, லவ் சீன்ஸ் இருக்கு அனால் ஆபாச காட்சிகளோ இல்லை, அனல் தெறிக்கும், ரசிக்கும் படியான வெறித்தனமான மிரட்டலான சண்டை காட்சிகள் இருக்கிறது ஆனால், ரத்தம் தெறிக்கும் வன்முறைக்கு காட்சிகளோ இல்லாமல் நல்ல குடும்ப படமாக இருப்பதால் குடும்பம் குடும்பமாக திரையரங்கை நோக்கி படையெடுக்கிறார்கள்.

இப்படி, பெண்களும் பெண் குழந்தைகளும் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வருவது தான்  படத்தின் வெற்றியை தீர்மானித்திருக்கிறது. 

தல படம் ரிலீஸ் வெளியானால் எப்படியும் ஒருவாரம் ரசிகர்களே திரையரங்கை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். ஆனால் இரண்டாவது நாளிலேயே ஃபேமிலி ஆடியன்ஸை வரவழைத்தது சிவாவின் செண்டிமெண்ட் மேஜிக் என்று தான் சொல்லணும்.
 

click me!