Vijay 66 movie : லீக்கான விஜய் 66 அப்டேட்.. இரட்டை வேடம்..மன நோயாளி..வேற லெவல் செண்டிமென்டில் விஜய் next..

Kanmani P   | Asianet News
Published : Jan 07, 2022, 01:05 PM ISTUpdated : Jan 07, 2022, 01:27 PM IST
Vijay 66 movie : லீக்கான விஜய் 66 அப்டேட்.. இரட்டை வேடம்..மன நோயாளி..வேற லெவல் செண்டிமென்டில் விஜய் next..

சுருக்கம்

Vijay 66 movie : எரோட்டோமேனியா என்ற வித்தியாசமான மன நோயால் பாதிக்கப்பட்டு தன்னை யாரோ தீவிரமாக காதலிப்பது போல் நினைத்துக் கொண்டதுபோல் இருக்கும் கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்றும் தகவல் பரவி வருகிறது.

தளபதி பட அப்டேட் என்றாலே ரசிகர்களுக்கு தனி கொண்டாட்டம் தான். அடுத்தடுத்து அதிரடி படங்களை கொடுத்து ரசிகர்களை குஷி படுத்தி வரும் விஜய் 'மாஸ்டர்' படத்தில் வாத்தியாராக தோன்றி மாஸ் காட்டி இருந்தார். கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. இதை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ள நெல்சன் மண்டேலா இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக  பூஜா ஹெக்டேவும், மூன்று வில்லன்களில் ஒருவராக செல்வராகவனும் இவர்களுடன் யோகி பாபு உள்ளிட்டோரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும்  இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிரூத் 'பீஸ்ட்' படத்திற்கும் இசையமைக்கிறார்.  ஜார்ஜியா, சென்னை, டெல்லியென பிரமாண்ட செட்களுடன் உருவாகி வரும் இந்த படம்  வரும் ஏப்ரலில் திரைக்கான உள்ளது.

இதற்கிடையே விஜய் தனது 66 வது படத்திற்காக தெலுங்கு இயக்குனர் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளருடன் கைகோர்த்துள்ளார். இந்த புதிய படத்தை இயக்கவுள்ள வம்சி பைடிபல்லி தமிழுக்கு புதிய  இயக்குனர் இல்லை. இவர் ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு நாகார்சூனா, கார்த்திக் நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஹிட் அடித்த இந்த படம் முழுக்க முழுக்க எமோஷன் கலந்த கமர்ஷியல் படமாகவே இருந்தது. அதோடு வம்சி இயக்கத்தில் வெளியாகியா பிருந்தாவனம், மகரிஷி உள்ளிட்ட படங்கள் எமோஷன் சார்ந்த கதைக்களத்தையே கொண்டிருந்தன. அதன்படி விஜயின் 66 திரைப்படமும் கமர்ஷியல் படமாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. 

விஜய் 66 குறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் வம்சி;  இந்த புதிய படம் அரசியல் மற்றும் ஆக்ஷன் படம் கிடையாதென்றும், மனித உறவுகள்  உணர்வுகள் சார்ந்த கதைக்களமே தனது பலம், இது நிச்சயம் விஜய் 66 -ல் இருக்கும் என தெரிவித்துள்ளார். 

இந்த படம் குறித்த தருமாறு அப்டேட் அவ்வப்போது இணையத்தில் வெளியான வண்ணம் உள்ளது.  விஜய் 66-ல்  விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், எரோட்டோமேனியா என்ற வித்தியாசமான மன நோயால் பாதிக்கப்பட்டு தன்னை யாரோ தீவிரமாக காதலிப்பது போல் நினைத்துக் கொண்டதுபோல் இருக்கும் கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்றும் தகவல் பரவி வருகிறது. விஜய் 66 குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!