தளபதி 65 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..!

Published : Oct 02, 2020, 12:33 PM IST
தளபதி 65 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..!

சுருக்கம்

தமிழகத்தில் 5 ஆவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் திரையரங்குகள் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல், 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் 5 ஆவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் திரையரங்குகள் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல், 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள, மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், திரையரங்குகள் திறக்கப்பட்டதும் மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய 65 ஆவது படத்தை நடிக்கிறார். இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது சன் பிச்சர்ஸ் நிறுவனம், என்கிற தகவல் ஏற்கனவே வெளியான நிலையில்.. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி 'தளபதி 65' படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்  துவங்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் 'மாஸ்டர்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் நிலையில், அதே ஆண்டில் தீபாவளிக்கு விஜய்யின் மற்றொரு படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக உள்ளது.

மேலும் தளபதி 65 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை விஜய் இரட்டை வேடங்களில் நடித்ததை விட இது சற்று வித்தியாசமாக இருக்கும் என்றும், ஒரு விஜய் முரட்டு வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டான் முதல் பராசக்தி வரை... 100 கோடி வசூலை வாரிசுருட்டிய டாப் 5 சிவகார்த்திகேயன் படங்கள்..!
Poonam Bajwa : குட்டி கவுனில் கும்முனு இருக்கும் பூனம் பஜ்வா!! குவியும் கவனம்.. க்யூட் கிளிக்ஸ்!!