விஜய் 63 படப்பிடிப்பில் நடந்தது என்ன? துணைநடிகையின் பரபரப்பு புகார் கடிதம்! ஒரு வாரத்திற்கு பின் வெளியானது!

Published : Apr 23, 2019, 03:30 PM ISTUpdated : Apr 23, 2019, 03:31 PM IST
விஜய் 63 படப்பிடிப்பில் நடந்தது என்ன? துணைநடிகையின் பரபரப்பு புகார் கடிதம்! ஒரு வாரத்திற்கு பின் வெளியானது!

சுருக்கம்

இயக்குனர் அட்லீ தற்போது, விஜய் நடித்து வரும் 63 ஆவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகி பாபு, 'பரியேறும் பெருமாள்' கதிர், இந்துஜா உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.  

இயக்குனர் அட்லீ தற்போது, விஜய் நடித்து வரும் 63 ஆவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகி பாபு, 'பரியேறும் பெருமாள்' கதிர், இந்துஜா உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை நசரத்பேட்டையில் உள்ள Evp பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் துணைநடிகை ஒருவரை,  இயக்குனர் அட்லீ மற்றும் துணை இயக்குனர்கள் தன்னை அவமானப்படுத்தியதாக காவல் நிலையத்தில், பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதில் கூறியிருப்பதாவது... " நான் சினிமா துறையில் துணைநடிகையாக பணிபுரிந்து வருகிறேன். 16 .4 .19 அன்று EVP பிலிம் சிட்டியில் நடந்து வரும் இயக்குனர் அட்லீயின் திரைப்படத்தில் வேலை பார்க்க வந்தேன். 

வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது, அட்லீயும் அவருடைய உதவியாளர்களும், என்னை தரைகுறைவான வார்த்தைகளால் பேசி, வேலை பார்க்க விடாமல் வெளியே அனுப்பி விட்டனர். எனவே அட்லீ மற்றும் உதவி இயக்குனர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

இவரின் புகாருக்கு நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.  இந்நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி ஒரு வாரம் ஆன நிலையில் தற்போது வெளியாகி புகார் கொடுத்த துணை நடிகை கிருஷ்ணா தேவியின் புகார் கடிதம் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!