
திரையுலகில் எப்போதும் அரைவேக்காடுகளுக்குப் பஞ்சமில்லை என்பதை நிரூபிப்பதுபோல் இந்திய ராணுவத்தைக் கிண்டலடித்து பெரும் சர்ச்சையில் மாட்டி முழித்துக்கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன்.
கடந்த 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் மாலை ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத இயக்கத்தினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு நிரப்பிய காரை தற்கொலைப்படை வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதித் தாக்குதல் நடத்தினர். இதில் 49க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தை அடுத்து பல்வேறு அரசியல் பிரபலங்களும், நடிகர்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்து அரசியல் உயிரிழந்த குடும்பத்திற்கு இழப்புத் தொகையும் அரசு அறிவித்துள்ளது. அதே போல பல்வேறு பிரபலங்களும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதி யுதவியை அறிவித்துள்ளனர். அமிதாப் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் நிதி அறிவித்தார். அவருக்கும் ஒருபடி மேலே போய் கிரிக்கெட் வீரர் விரேந்திர ஷேவாக் ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்றார்.
இப்படி நாடே சோகத்தில் ஆழ்துள்ள நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் 9 க்கு 6 இலக்கை சுட்டுள்ளேன். எனவே என்னை உடனே ராணுவத்தில் சேருங்கள்’ என்று வீராவேசமாக ட்விட் பண்ணியுள்ளார். இப்பதிவுக்குக் கீழே கமெண்ட் போடுபவர்கள் ‘இவன் சரியான லூஸுப் பயலா இருப்பான் போல இருக்கே’ என்று துவங்கி மிகக் கோபமாக திட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.