யோகிபாபுவை வைத்து வடிவேலுக்கு முடிவு கட்டத்துடிக்கும் டைரக்டர் ஷங்கர்...’24ம் புலிகேசி ட்விஸ்ட்...

Published : Feb 19, 2019, 10:02 AM IST
யோகிபாபுவை வைத்து வடிவேலுக்கு முடிவு கட்டத்துடிக்கும் டைரக்டர் ஷங்கர்...’24ம் புலிகேசி ட்விஸ்ட்...

சுருக்கம்

சுமார் மூன்று வருடங்களுக்கும் மேலாக படங்கள் எதுவுமின்றி வீட்டில் ஓய்வெடுத்துவரும் நடிகர் வடிவேலு, நிரந்தர ஓய்வை நோக்கிச் செல்கிறாரோ என்று நினைக்கும் அளவுக்கு அவர் கையிலிருக்கும் ஒரே படமான ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ யில் யோகி பாபு நடிக்கவிருப்பதாக நம்பகமான செய்திகள் நடமாடுகின்றன.

சுமார் மூன்று வருடங்களுக்கும் மேலாக படங்கள் எதுவுமின்றி வீட்டில் ஓய்வெடுத்துவரும் நடிகர் வடிவேலு, நிரந்தர ஓய்வை நோக்கிச் செல்கிறாரோ என்று நினைக்கும் அளவுக்கு அவர் கையிலிருக்கும் ஒரே படமான ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ யில் யோகி பாபு நடிக்கவிருப்பதாக நம்பகமான செய்திகள் நடமாடுகின்றன.வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். இதிலும் கதாநாயகனாக நடிக்க வடிவேலுவையே ஒப்பந்தம் செய்தனர். சிம்புதேவன் இயக்கினார்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து தொடங்கினார்கள். சில நாட்கள் படத்தில் நடித்த வடிவேலு ஆடை வடிவமைப்பாளரை மாற்றியது உள்பட பல்வேறு பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு விலகினார். இதனால் படப்பிடிப்பு நின்று போனது. அரங்கையும் பிரித்துவிட்டனர். இதனால் பலகோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. இந்த பிரச்சினையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு போனார் இயக்குனர் ஷங்கர். வடிவேலுவிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத்தொடர்ந்து படத்தில் மீண்டும் நடிக்க வடிவேலு சம்மதித்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் இதுவரை படப்பிடிப்புக்கு அவர் செல்லவில்லை. இதனால் படக்குழுவினர் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபுவை இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது.யோகிபாபு முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கிறார். கடந்த வருடம் மட்டும் 10 படங்களில் நடித்து இருந்தார். தற்போது தர்மபிரபு என்ற நகைச்சுவை படத்தில் எமன் வேடத்தில் நடித்து வருகிறார். அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆனாலும் யோகிபாபு நடிப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. வடிவேலுவை மீண்டும் நடிக்க வைப்பதில் இயக்குநர் சிம்புதேவன் மட்டுமே உறுதியாக இருப்பதாகவும் தயாரிப்பாளர் ஷங்கர் யோகிபாபுவுக்கு ஓ.கே. சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது.

’எனக்கே எண்ட் கார்டு போட்டு எகத்தாளமாடா பண்றீங்க. எனக்கு எண்டே கிடையாதுடா’ என்று ‘தலைநகரம்’ படத்தில் வடிவேலு பேசிய வசனம் உண்மையாக வேண்டுமானால், இனியும் கவுரவம் பார்க்காமல் வடிவேலு இப்படத்துக்கு உடனே ஆஜராகவேண்டும்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கட்டுக்கடங்காத கூட்டம்... சில்மிஷம் செய்த ரசிகர்கள் - கடவுளே என கதறிய நிதி அகர்வால் - வீடியோ இதோ
மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்