Nayanthara - vignesh shivan : காதல் டூ கல்யாணம்.... ஐடியா இருக்கா? - விக்னேஷ் சிவன் சொன்ன ‘நச்’ பதில்

By Ganesh PerumalFirst Published Jan 6, 2022, 1:10 PM IST
Highlights

நயனும், விக்கியும் தற்போது ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களது திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல்வயப்பட்டார். இந்த காதல் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தற்போது வரை நீடித்து வருகிறது.

விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இவர்கள் இருவரும் தற்போது ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களது திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “நாங்க எதையும் மறைக்கல. எங்கு போனாலும் அது குறித்து சமூக வலைதளத்தில் தெரிவிக்கிறோம். திருமணம் கண்டிப்பாக நடக்கும். அது நடக்கும்போது அறிவிக்கிறோம்” என்றார். முன்னதாக கடந்தாண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாராவிடம் திருமணம் பற்றி கேட்டபோது, அவரும் இதே பதிலை தான் கூறி இருந்தார்.

கெரியரை பொருத்தவரை இருவரும் இணைந்து தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தை தயாரித்து வருகின்றனர். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். மேலும் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. 

வருகிற பிப்ரவரி மாதம் காதலர் தினத்தையொட்டி இப்படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இது காதலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ரொமாண்டிக் படம் என்பதால் அந்த சமயத்தில் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

click me!