
கோலிவுட்டில் புறக்கணிக்க பட்டு, பாலிவுட்டில் தனது வெற்றிக்கொடியை நாட்டியவர் நடிகை வித்யா பாலன்.
இவர் பிரபல கவர்ச்சி நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தது பிரபலமானவர், மேலும் இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.
இந்நிலையில் இவரும், இவரது கணவர் சித்தார்த் ராய் கபூரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய உள்ளதாக ஒரு செய்தி வெளியாகியது.
விவாகரத்து தொடர்பாக தற்போது பேசியுள்ள வித்தியா பாலன், தனக்கு சித்தார்த் கபூரை சந்தித்த பிறகு தன திருமணம் மீது ஆசை வந்ததாகவும், மேலும் நாங்கள் சாதாரண கணவன் மனைவி போல இருவருவரும் இணைத்து விழாக்களில் கலந்து கொள்ளாததாலும், சேர்த்து செல்பி எடுத்து இணையதளங்களில் போடாததால் இது போன்ற வதந்திகள் பரவி வருவதாக தெரிவித்தார் .
மேலும் தனக்கும் தன் கணவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்றும், விவாகரத்து செய்தி முற்றிலும் பொய் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.