கணித மேதையாக மாறும் வித்யா பாலன்!

Published : Feb 06, 2019, 06:54 PM IST
கணித மேதையாக மாறும் வித்யா பாலன்!

சுருக்கம்

மனித கம்ப்யூட்டர் என்று புகழ் பெற்றவர் சகுந்தலா தேவி. பெங்களூரைச் சேர்ந்த இவர் சிறு வயதிலிருந்தே சுயமாக கணக்கு பாடங்களைக் கற்றார். சிக்கலான கணக்குகளுக்கு சில நொடிகளில் தீர்வு சொன்னார். இவரது திறமை உலகம் முழுவதும் பரவியது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார்.  

மனித கம்ப்யூட்டர் என்று புகழ் பெற்றவர் சகுந்தலா தேவி. பெங்களூரைச் சேர்ந்த இவர் சிறு வயதிலிருந்தே சுயமாக கணக்கு பாடங்களைக் கற்றார். சிக்கலான கணக்குகளுக்கு சில நொடிகளில் தீர்வு சொன்னார். இவரது திறமை உலகம் முழுவதும் பரவியது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு தனது 83 ஆவது வயதில், உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். தற்போது சகுந்தலா தேவியின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது.  இதில் சகுந்தலாதேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். 

இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில்,  நடிக்க 'தங்கள்' இந்தி படம் மூலம் பிரபலமான சரண்யா மல்கோத்ராவிடம் பேசிவருகிறார்கள்.  வித்யாபாலன் ஏற்கனவே சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் தயாரான 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றவர். தெலுங்கில் தயாரான என்டி ராமராவ் வாழ்க்கை கதையில் அவரது மனைவி பசவதாரகம் வேடத்தில் நடித்தார்.

மேலும் அஜீத் குமார் ஜோடியாக இந்தி படத்தின் 'ரீமேக்காக' எடுக்கப்படும் பிங்க் படத்தின் மூலம் தமிழுக்கு வந்துள்ளார்.  இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படம் முடிந்ததும் சகுந்தலாதேவி வாழ்க்கை கதையில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!