
மிக விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள அஜீத், வித்யா பாலன் காம்பினேஷனில் விநோத் இயக்கும் படத்தில் தயாரிப்பாளர் போனி கபூர், ஸ்ரீதேவி தம்பதியினரின் மகள் ஜான்வி கபூரும் ஒரு முக்கிய பத்திரத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருப்பதாக நம்பகமான தகவல்கள் மும்பையிலிருந்து சென்னையை நோக்கி நடமாடுகின்றன.
‘பிங்க்’ ரீமேக்காக தமிழில் தயாராகவிருக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதில் வித்யா பாலனுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட பாத்திரம் தவிர்த்து மூன்று முக்கிய இளைஞிகள் பாத்திரங்கள் உள்ளன. அதில் இப்போதைக்கு தப்ஸி இந்தியில் நடித்த பாத்திரத்துக்கு ஸ்ரத்தா ஸ்ரீநாத் மட்டுமே அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மற்றொரு முக்கிய பாத்திரத்தில் தயாரிப்பாளர் போனி கபூர், ஸ்ரீதேவி தம்பதியினரின் மகள் ஜான்வி கபூரை நடிக்கவைக்க இயக்குநர் விநோத் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு மகளும் தந்தையும் உடனே ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. இயக்குநர் விநோத்துக்கு இந்த யோசனையை வழங்கியது சாட்சாத் அஜீத்தே தானாம்.
இந்தியில் ‘ததக்’ என்ற சுமாரான வெற்றிப் படத்தின் மூலம் அறிமுகமான ஜான்வி கபூர் அஜீத்தின் தீவிர ரசிகையாம். தனது மகளின் தமிழ்ப்பட எண்ட்ரி செய்தியை மிக விரைவில் அறிவிக்கவிருக்கிறார் போனி கபூர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.