விடுதலை புலிகள் பிரபாகரனின் வாழ்க்கை திரைப்படமாகிறது...!

 |  First Published May 29, 2018, 12:26 PM IST
viduthalai puligal prabaharan bio graphy moive



இலங்கை தமிழர்களின் உரிமைக்காக பாடுபட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் உலா வந்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு தமிழில் 'சீரும் புலிகள்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 'The Raging Tigers' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

ஸ்டுடியோ 18 தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை வெங்கடேஷ்குமார் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'லைட்மேன்' , 'உனக்குள் நான்' 'நீலம்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

படத்தின் தலைப்பை அறிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்து கூறியபோது. 'மேதகு தமிழ் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வதில் பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். 

click me!