
தமிழ்ப் படங்களில் நடிப்பதை அறவே வெறுத்து வந்தநடிகை வித்யா பாலன், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தொடர்ச்சியான வேண்டுகோள்களுக்குப் பிறகே அஜீத்தின் ‘பிங்க்’ ரீமேக்கில் நடிக்க சம்மதித்திருகிறார் நடிகை வித்யா பாலன்.
வித்யா பாலன் தமிழ்ப் படங்களை வெறுக்க என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள 15 வருடங்கள் பின்னோக்கிப் போகவேண்டும்.
ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் சந்தோஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்துக்கு முதலில் ஜோடியாகக் கமிட் பண்ணப்பட்டிருந்தவர் வித்யா பாலன். ஹோட்டல் வடபழனி ஆதித்யாவில் தங்கவைக்கப்பட்டிருந்த வித்யா பாலன் முதல் மூன்று நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டிருந்த நிலையில், ஸ்ரீகாந்தை விட மூத்தவராகத் தெரிகிறார் என்று காரணம் சொல்லப்பட்டு படத்தை விட்டு தூக்கி அடிக்கப்பட்டார்.
மேட்டர் அத்தோடு முடியவில்லை. மூன்று நாள் ஹோட்டல் பில்லையும் கட்டாத தயாரிப்பு நிறுவனம் அதை வித்யா பாலனின் தலையில் கட்டியது. அப்போது வித்யா பாலன் இந்தியிலும் பிரபலமாகாதவர் என்பதால் அவர் கையிலும் பணமில்லை. வேறு வழியின்றி கையில் போட்டிருந்த வளையல்களை விற்று பில்லை செட்டில் பண்ணியபிறகே ஹோட்டல் நிர்வாகம் சிறைப்பிடித்து வைத்திருந்த அவரை வெளியே செல்ல அனுமதித்தது.
இதன் பின்னர் இந்தியில் வித்யா பாலன் தொடர்ச்சியாக ஹிட்டடித்து முன்னணி நடிகையான அதே ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் உட்பட எத்தனையோ தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் முயன்றபோதும் கூட, தமிழ்ப்படமா வேண்டாம் என்று கதையே கேட்காமல் கூட நிராகரித்து வந்தார் வித்யா பாலன்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.