
சின்ன வயதில் தான் தூங்கிக் கொண்டிருந்தபோது கன்னத்தைக் கிள்ளிவிட்டுச் சென்ற நடிகை த்ரிஷாவுடன் ஜோடியாக நடிக்க ஆசை என்ற வினோத ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் விக்ரமின் மகன் துருவ்.
தெலுங்கு ஹிட் படமான ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கான ‘வர்மா’வில் நாயகனாக இயக்குநர் பாலா மூலம் அறிமுகமாகிறார் நடிகர் விக்ரமின் வாரிசு துருவ். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த அவர் தான் த்ரிஷாவுக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
அதற்கு விஷேச காரணம் உண்டா எனக்கேட்கப்பட்ட போது,’நான் பெரிய பையனாக ஆன பிறகு இதுவரை த்ரிஷாவைச் சந்தித்ததில்லை. ஆனால் சிறுவனாக இருந்த போது அப்பா ஒரு பிரிவியூவுக்கு அழைத்துப் போயிருக்கிறார். படம் முடியும்போது நான் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறேன். அவர் கொஞ்சமும் பாவம் பார்க்காமல் என் கன்னத்தை நறுக்கென கிள்ளிவிட்டு ஓடிவிட்டார்.
இத்தகவலை அப்பாதான் என்னிடம் சொன்னார். எனவே அவர் கன்னத்தை பதிலுக்கு கிள்ளிவைக்கவேண்டுமானால் அவருடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்தால்தான் அது சாத்தியப்படும்’ என்கிறார் துருவ். படத்துக்கு எனக்கு பதினெட்டு உனக்கு முப்பத்தெட்டு’ன்னு டைட்டில் வச்சிரலாமா ராசா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.