காந்தி ஜெயந்திக்கு ஸ்டாக் வைத்த சரக்கு எங்கே?...பெற்ற தந்தையை கொடுமைப்படுத்தும் குடிகார மகன்...வைரல் வீடியோ...

By Muthurama LingamFirst Published Oct 3, 2019, 4:23 PM IST
Highlights

கேரளா, குறத்திக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ். நித்தியக் குடிகாரர் என்று தெரிகிறது. அதில் ஒருநாள் குடிக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அக்டோபர்2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சரக்குக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் ஒருநாள் முன்னதாகவே எக்ஸ்ட்ரா ஒரு பாட்டிலை[விலை ஜஸ்ட் ஐம்பதே ரூபாய்] வாங்கி வீட்டில் ஸ்டாக் வைத்திருக்கிறார் ரதீஷ். 

காந்தி ஜெயந்தி அன்று கடைகளில் ‘சரக்கு’கிடைக்காது என்பதால் முன் ஜாக்கிரதையாக தான் வாங்கி ஸ்டாக் வைத்திருந்த பாட்டிலை எடுத்து தனது தந்தை குடித்துவிட்டதாக நினைத்து மகன் அவரை அடித்து நொறுக்கும் காட்சி ஒன்று வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தந்தையை அடித்துவிட்டுத் தலைமறைவான அவர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீஸ் தேடி வருகிறது.

கேரளா, குறத்திக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ். நித்தியக் குடிகாரர் என்று தெரிகிறது. அதில் ஒருநாள் குடிக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அக்டோபர்2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சரக்குக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் ஒருநாள் முன்னதாகவே எக்ஸ்ட்ரா ஒரு பாட்டிலை[விலை ஜஸ்ட் ஐம்பதே ரூபாய்] வாங்கி வீட்டில் ஸ்டாக் வைத்திருக்கிறார் ரதீஷ். அந்த பாட்டில் வீட்டிலிருந்து திடீரென மாயமானவுடன் ஆத்திரத்தின் உச்சிக்குப் போகும் ரதீஷ் பெற்ற தந்தை என்றும் பாராமல் அவரை அடித்துப் புரட்டி எடுக்கிறார். அவரது வேட்டியை உருவி நிர்வாணமாக்கி அவமானப்படுத்தியும் அவரது ஆத்திரம் தீரவில்லை."

‘உன் பாட்டில் என்ன ஆனது என்று எனக்குத் தெரியாது. அதை நான் எடுக்கவில்லை’என்று தந்தை எவ்வளவோ கதறியும் அந்த குடிகார கோவிந்தன் அவரைப் பொருட்படுத்தவில்லை. ’கேரளா கிரீன்’என்ற முகநூல் பக்கத்தில் பதியப்பட்டு பின்னர் நீக்கப்பட்டாலும் வலைதளங்களில் அவ்வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவைக் கைப்பற்றிய குறத்திக்காடு பகுதி போலீஸார், ரதீஷ் மீது 308 , 323 , 506 , 427 , 324,  294 (b) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். குடிகாரத் தம்பி தலைமறைவாக இருக்கிறார்.

click me!