அடக்கு முறையின் மறுமுகத்தை காட்டிய 'களத்தூர் கிராமம்' வெற்றிமாறன் பாராட்டு!

 
Published : Nov 05, 2017, 06:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
அடக்கு முறையின் மறுமுகத்தை காட்டிய 'களத்தூர் கிராமம்' வெற்றிமாறன் பாராட்டு!

சுருக்கம்

vetrimaran wish the kalathur grammam movie

நல்ல படங்களை எப்போதும் தமிழ்சினிமா ரசிகர்க​ளும், ஆர்வலர்களும்​ ஆதரித்தும் பாராட்டியும் வருகின்றனர். அந்தவகையில் ‘களத்தூர் கிராமம்’ படம் பார்த்தவர்கள் அனைவரும் இந்த படத்தை நல்ல படம் என்று வருகின்றனர்.

அடக்குமுறையின் மற்றொரு முகத்தை காட்டியிருக்கிறது களத்தூர் கிராமம்​ என இயக்குநர் வெற்றிமாறன் இந்த படத்தை பாராட்டியுள்ளார்.​

இதுகுறித்து தயாரிப்பாளர் சீனுராஜ் கூறியதாவது, 

“இந்த ‘களத்தூர் கிராமம்’ படத்தை பொ​ரு​த்தவரை எனக்கு மன நிறைவான படம். இரண்டுமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போனது மிகுந்த மன வருத்தத்தையும் நிறைய பொருட்செலவையும் ஏற்படுத்தியது. முதல்முறை போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் போன காரணத்தினாலும், இரண்டாவது முறை ரிலீஸ் தேதி அறிவித்தபோது தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாகவும் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. 

இளைஞன்.. சினிமாவுக்கு புதியவன்.. திரையரங்குகள் உறுதி செய்யும் போராட்டம் போன்றவை மன அழுத்தத்தின் உச்சத்தில் என்னை கொண்டுபோய் நிறுத்தியது. இருந்தாலும் விடாப்படியாக, ஒரு நல்ல படத்தை மக்கள் மத்தியில் சரியாக கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். 

அக்டோபர்-27ஆம் தேதி படம் 80 திரையரங்குகளில் வெளியானது. இன்று படத்திற்கான பாராட்டுக்கள் எனக்கு மன நிறைவை தந்துள்ளது. நல்ல சினிமாவை நேசிக்க​க்​ கூடிய சில திரையரங்க நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது ஆறுதலை​த்​ தந்தது. அவர்களாகவே படத்தை​க்​ கேட்டு வாங்கி திரையிட்டார்கள்.

ஒரு நல்ல படம் மக்களை சென்றடைவதற்கே ஒரு வாரம் தேவைப்படுகிறது. ​’​​ஓ​ப்பனிங் வியாபாரம்​’​ என்கிற யுத்தியை மட்டுமே கடந்தகால சினிமா கடை​ப்​பிடித்து வருகிறது என்பது வேதனை.. சிறிய படங்களுக்கும் நல்ல படங்களுக்கும் 15 நாட்களாவது அந்தப்படம் திரையிடப்பட்டால், திரையரங்கை விட்டு எடுக்காமல் இருந்தாலே போதும்.. எட்டவேண்டிய வெற்றியை எட்டிவிடும்.. 

நல்ல படங்களையும் சிறிய படங்களையும் ஓடவைக்கவேண்டிய சாதகங்களை நாம் உருவாக்கியே ஆகவேண்டும். இல்லையென்றால் தமிழ்சினிமாவில் சிறு, குறு பட தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை நோக்கி மட்டுமே தள்ளப்படுவார்கள்.. அதற்கு ஆவ​ண​ செய்யவேண்டும்.

மழை மற்றும் இந்த வார வெளியீடுகள் தாண்டி ‘களத்தூர் கிராமம்’ நிலைத்து நிற்பதும், கூடுதல் திரையரங்குகள் கிடைப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது​.  பெரிய  நடிகர்கள் நடித்தால் அல்லது பெரிய தயாரிப்பாளர் படம் என்றாலோ, பெரிய இயக்குநர்கள் இருந்தால் மட்டுமே சில பிரபலங்கள்  சமூக வலைதளங்களில் பாராட்டுகிறார்கள். சில நல்ல படங்கள் வரும்போது அதைப் பார்த்துவிட்டு பாராட்டினால் சிறு படங்கள் வெற்றிபெறும். இயக்குநர்​ ​வெற்றிமாறன் விதிவிலக்காக எங்கள் படம் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இது எங்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. அவருக்கு  நன்றி!” ​என்று தயாரிப்பாளர் ​A.R. ​சீனுராஜ் கூறினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!