
மதுரவாயல், தனலட்சுமி தெருவை சேர்ந்தவர் சரண்ராஜ். 26 வயதாகும் இவர் இயக்குனர் வெற்றிமாறனிடம் துணை இயக்குனராக பணியாற்றிக்கொண்டே... வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக ஒரு சில காட்சியில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில், கே.கே.நகர், ஆற்காடு சாலை அருகே சரண்ராஜ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வேகமாக வந்த கார் சரண்ராஜ் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
40 வயதில்... சேலையை சரிய விட்டு கவர்ச்சி காட்டும் குத்து ரம்யா!
இதில், கோர விபத்தில்... தூக்கி வீசப்பட்ட நடிகர் சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே பலமான காயங்களுடன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அறிந்ததும், அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்துக்குச் விரைந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், சரண்ராஜின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது போக்குவரத்து போலீசார், வழக்குப்பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கண்ட விசாரணையில் அவர் சாலிகிராமம் எம்.சி.அவென்யூ பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் (41) என்பதும், அவரும் சினிமாவில் துணை நடிகராக இருப்பதும் தெரியவந்தது.
ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பிரபல இயக்குனருக்கு மாரடைப்பு.! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!
மேலும் இறந்த சரண்ராஜ், பழனியப்பன் இருவரும் நண்பர்கள் என்றும் விசாரணையில் கூறப்படுகிறது. பழனியப்பன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் நேற்று அதிக போதையில் இருந்ததாகவும் காவல்துறையின் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. போதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த பழனியப்பன், ஒரு கட்டத்தில் கார் முன்னால் சென்று கொண்டிருந்த, சரண்ராஜின் இருசக்கர வாகனத்தின் மீதும் மோதி விபத்தை ஏற்பத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் துணை இயக்குனரும் நடிகருமான சரண்ராஜ் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.