Bhavatharini Husband: பவதாரிணிகணவர் யார்? பலரும் அறியாத சில தகவல்கள் இதோ!

By Ansgar R  |  First Published Jan 25, 2024, 9:31 PM IST

Ilayaraja Daughter Bhavatharini Death : பிரபல பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி இலங்கை இன்று மாலை காலமானார் என்ற சோகமான செய்தி இப்பொது வெளியாகியுள்ளது.


தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா அவர்களுடைய மகள் பவதாரினி இன்று இலங்கையில் தனது 47 வது வயதில் காலமானார். அவர் கடந்த ஜூலை 23ஆம் தேதி 1976 ஆம் ஆண்டு பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாகவே புற்று நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த பவதாரினி இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். 

கடந்த 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "மை டியர் குட்டிச்சாத்தான்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் களமிறங்கி இருந்தாலும், 1995 ஆம் ஆண்டு பிரபு தேவாவின் "ராசையா" என்ற திரைப்படத்தில் வந்த "மஸ்தானா மஸ்தானா" என்கின்ற பாடல் தான் இவர் குரலில் ஒலித்த முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tap to resize

Latest Videos

undefined

Bhavatharini: இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி சற்றுமுன் காலமானார்!

பாடகியாக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களுக்கு இவர் இசையமைப்பாளராகவும் திகழ்ந்து வந்தார். பாடகி பவதாரினி அவர்களுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த ஆர். சபரி ராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர் பிரபல பத்திரிக்கையாளர் ராமச்சந்திரன் அவர்களுடைய மகன் என்றும் கூறப்படுகிறது.

சபரி ராஜ் அவர்கள் சென்னையில் புகழ்மிக்க விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது, இவர்களுடைய திருமணம் கடந்த 2005 ஆம் ஆண்டு கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் நடைபெற்றது, அதன் பிறகு செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் அரங்கில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Deva: கொஞ்ச நாள் பொறு தலைவா! தமிழ்நாட்டில் முக்கிய இடத்தில் முதல் முறையாக இசை கச்சேரி நடத்தும் தேவா!

click me!