இவருக்கும் வயசே ஆகாது போல.. குரலில் குறையாத கம்பீரம் - மோகன்லாலின் "மலைக்கோட்டை வாலிபன்" மிரட்டும் டீசர் இதோ!

Ansgar R |  
Published : Dec 07, 2023, 08:07 AM IST
இவருக்கும் வயசே ஆகாது போல.. குரலில் குறையாத கம்பீரம் - மோகன்லாலின் "மலைக்கோட்டை வாலிபன்" மிரட்டும் டீசர் இதோ!

சுருக்கம்

Malaikottai Vaaliban Teaser : மலையாள திரையுலகில் கடன் 13 ஆண்டுகளாக பல நல்ல திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர் தான் லிஜோ ஜோஸ் பெல்லிஸிசேரி. இவர் இயக்கத்தில் இப்பொது உருவாகியுள்ள திரைப்படம் தான் மலைக்கோட்டை வாலிபன். 

பிரபல இயக்குனர் பாசில் இயக்கத்தில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான "மஞ்சில் விரிஞ்ச பூக்கள்" என்கின்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை துவங்கி மோகன்லால், இந்திய திரை உலகில் கடந்த 43 ஆண்டுகளாக பயணித்து வரும் ஒரு முன்னணி நடிகர் ஆவார். இவர் மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் ஆகவும் திகழ்ந்து வருகிறார். 

தான் திரையுலகில் அறிமுகமான 16 ஆண்டுக்குள் 200க்கும் அதிகமான திரைப்படத்தில் நடித்த மோகன்லால், முதல்முறையாக கடந்த 1997 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் வெளியான "இருவர்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது தமிழ் திரையுலக பயணத்தை தொடங்கினார். அன்று தொடங்கி இன்று வரை பல தமிழ் திரைப்படங்களில் அவர் தோன்றி தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்து வருவது அனைவரும் அறிந்ததே. 

ஜப்பான் படம் சரியா போகவில்லை... ரெடியாகும் Sequels - மாஸ் காட்ட காத்திருக்கும் கார்த்தியின் 3 படங்கள்!

இந்திய மொழிகள் பலவற்றில் தொடர்ச்சியாக நடித்து வரும் மோகன்லால் அவர்கள் தற்பொழுது நடித்துள்ள திரைப்படம் தான் "மலைக்கோட்டை வாலிபன்". 2025 ஆம் ஆண்டு வரை சுமார் 8 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள மோகன்லால், ஒரு வித்தியாசமான தோற்றத்தில் "மள்ளன்" என்கின்ற கதாபாத்திரத்தில் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 

 

KPY Bala: 200 குடும்பத்திற்கு நிதியுதவி அளித்த விஜய் டிவி குக் வித் கோமாளி பாலா! குவியும் பாராட்டு!

மல்யுத்தம் தொடர்பான கதைகளம் கொண்ட ஒரு பீரியட் படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாகும்.\ மலையாள திரைப்படமான இந்த திரைப்படம், தமிழில் மோகன்லால் அவர்கள் தனது சொந்த குரலில் டப் செய்து வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.  

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!