பழம்பெரும் இயக்குனர் உடல்நலக்குறைவால் காலமானார்..!

Published : Jun 03, 2021, 11:51 AM IST
பழம்பெரும் இயக்குனர் உடல்நலக்குறைவால் காலமானார்..!

சுருக்கம்

பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ஜி.என்.ரங்கராஜன், வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனைகள் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், காலமானார். அவருக்கு வயது 90 . இவரது மறைவை ஒட்டி பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.  

பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ஜி.என்.ரங்கராஜன், வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனைகள் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், காலமானார். அவருக்கு வயது 90 . இவரது மறைவை ஒட்டி பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து, 'கல்யாண ராமன்' படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் ஜி.என்.ரங்கராஜன். இதை தொடர்ந்து, மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், எல்லாம் இன்பமயம்,  உள்ளிட்ட சில படங்களை இயக்கியது மட்டும் இன்றி,  மகராசன், ராணித்தேனி உள்ளிட்ட படங்களை அவர் தயாரித்தும் உள்ளார். மேலும் பலர் இவரிடம் உதவியாளராக பணி புரிந்த அனுபவத்தை கொண்டு இயக்குனர்களாக மாறியுள்ளனர். 

இவரை தொடர்ந்து இவரது மகன் குமரவேலனும் தமிழ் சினிமாவில் சிறந்த கதையம்சங்களை கொண்ட படங்களை இயக்கி வரும் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகும். 

இந்நிலையில் பழம்பெரும் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன்... கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு மற்றும் அதன் காரணமாக ஏற்படும் உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில், காலமாகி விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு கொரோனா இரண்டாவது அலை காரணமாக நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாத பிரபலங்கள் மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி