3000 சினிமா தொழிலாளர்களுக்கு 'ராக்கிங் ஸ்டார்' யஷ் செய்த மிகப்பெரிய உதவி..! குவியும் பாராட்டு..!

By manimegalai aFirst Published Jun 2, 2021, 9:28 PM IST
Highlights

KGF பட புகழ் யஷ், கன்னட திரையுலகை சேர்ந்த தொழிலாளர்களுக்கு 1 . 5 கோடி கொடுத்து உதவியுள்ளார்.
 

KGF பட புகழ் யஷ், கன்னட திரையுலகை சேர்ந்த தொழிலாளர்களுக்கு 1.5 கோடி கொடுத்து உதவியுள்ளார்.

கொரோனா முதல் அலையால் மற்ற துறைகளை விட சினிமா துறையும், சினிமா துறையை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் தொழிலாளர்களும் அதிகம் பாதிக்கப்பட்டனர். முதல் அலையின் கோர தாண்டவத்தில் இருந்து சற்று மீண்டு வந்த தொழிலாளர்களை, இரண்டாவது அலை தற்போது ஆட்டிப்படைத்து வருகிறது. எனவே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் வரை அனைத்து தென்னிந்திய சினிமா மற்றும் சின்னத்திரை ஷூட்டிங் பணிகள் முடங்கியுள்ளதால், இதை நம்பியே வாழ்ந்து வரும் தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான KGF புகழ், 'ராக்கிங் ஸ்டார்' யஷ் 3000 ஏழை, கன்னட சினிமா தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். அதன் படி, ரூ. 1 .5 கோடி ரூபாயை சினிமாவை நம்பியே, மொத்தம் 24 துறையில் பணியாற்றும், லைட் மேன், கலை, டிரைவர், கேமரா, உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு  ரூ .5000 விதம் வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த தகவலை நடிகர் யஷ் தன்னுடைய சமூக வலைத்தளம் மூலம் அறிவித்துள்ளார். ஊரடங்கு காரணமாக, வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வரும் தொழிலாளர்களின் நிலை அறிந்து, இந்த கடினமான நேரத்தை அவர்கள் சமாளிப்பதற்கு இவர் செய்துள்ள இந்த உதவிக்கு  ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

யஷ் நடித்த 'KGF ' முதல் பாகம், கன்னடம் மட்டும் இன்றி தமிழிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, அடுத்த மாதம் (ஜூலை 19 ) ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில், திடீர் என கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தாமதமாகியுள்ளது. எனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி வேறு தேதிக்கு மாற்ற வாய்ப்புள்ளதாகவே எதிர்பார்க்கப்படுகிறது.

click me!