Latest Videos

கோலிவுடிலும் செம பிரபலம்.. 490 கோடிக்கு அதிபதி.. கின்னஸ் சாதனை படைத்த Indiaவின் பணக்கார காமெடியன்? யார் அவர்?

By Ansgar RFirst Published Jun 11, 2024, 8:02 AM IST
Highlights

One of the Richest Comedy Actor In India : இந்திய திரையுலகை பொறுத்தவரை, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் சிறந்து விளங்கும் காமெடி நடிகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றே கூறலாம்.

யார் அந்த காமெடியன்?

Comedy Actor : ஆந்திராவில் பிறந்து தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பெரும் புகழோடும், அளவு கடந்த சொத்துக்களோடும் வாழ்ந்து வருகின்றார் ஒரு மிகப்பெரிய காமெடி நடிகர். இந்திய திரையுலக அரங்கில் இவருக்கு அறிமுகம் என்பதே எப்போதும் தேவையில்லை. 

Brahmanandam : கடந்த 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி ஆந்திராவில் பிறந்தவர் தான் பிரம்மானந்தம். தெலுங்கு திரைப்படங்களில் கிடந்த 1986 ஆம் ஆண்டு முதல் இவர் நடித்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளாகவே தெலுங்கு திரையுலகில் இவர் இல்லாத படங்களே வெளிவருவதில்லை என்று சொல்லும் அளவிற்கு மிகவும் பிஸியான நடிகர் இவர். 

Guinness World Records : ஆயிரம் படங்களை கடந்து நடித்து வரும், உயிரோடு உள்ள ஒரு நபர் என்கின்ற சிறப்பு பகுதியில் கின்னஸ் சாதனை படைத்தவர் பிரம்மானந்தம். தமிழிலும் தளபதி விஜயின் கில்லி தொடங்கி விரைவில் வெளியாக உள்ள உலக நாயகன் கமலின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வரை பல தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். 

Artist : இயல்பிலேயே இவர் ஒரு ஓவியர் என்றாலும் கூட தனித்துவமான இவருடைய உடல் மொழியால் சட்டென்று மக்களை சிரிக்க வைக்கும் கவுண்டர்களும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இவரை ஒரு மிகச்சிறந்த நடிகராக நகர்ந்து செல்ல வைத்திருக்கிறார். அக்கால நடிகர்கள் துவங்கி இக்கால இளம் நடிகர்கள் வரை அனைவருடனும் ஜோடி போட்டு காமெடியில் கலக்கி வருகின்றார். 

Brahmanandam Net Worth : 1990களில் பிற்பகுதியில், ஆண்டுக்கு குறைந்தது 35 திரைப்படங்கள் வரை நடித்த பிரம்மானந்தம், இப்பொழுதும் அதே வீரியம் குறையாமல் வருடத்திற்கு குறைந்தது 5 திரைப்படங்களிலாவது நடித்து வருகிறார். ஒரு படத்திற்கு இரண்டு கோடி ரூபாய் வரை சம்பளம் பெறும் பிரம்மானந்தத்தின் சொத்து மதிப்பு சுமார் 490 கோடியாம்.

click me!