நெஞ்சிக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம்... 'பிகில்' படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் பாடல்...! லிரிகள் வீடியோ...

Published : Sep 01, 2019, 06:33 PM IST
நெஞ்சிக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம்... 'பிகில்' படத்தில்  விஜய் பாடிய வெறித்தனம் பாடல்...! லிரிகள் வீடியோ...

சுருக்கம்

தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'பிகில்'. தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்தின், அடுத்த அப்டேஷனுக்கு விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இன்று இந்த படத்தின் செகண்ட் சிங்கள் பாடல் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.  

இதுகுறித்த, ப்ரோமோ ஒன்றையும் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது விஜய் முதல் முறையாக ஆஸ்கார் நாயகன், ஏ.ஆர்.ரகுமான் இசையில், பாடியுள்ள 'வெறித்தனம்' பாடல் வெறித்தனத்தோடு வெளியாகியுள்ளது. இந்த பாடல் வெளியான கணமே, விஜய் ரசிகர்கள் இந்த பாடலை வைரலாக்க துவங்கி விட்டனர். அதிலும் இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளார் என்றால் சொல்லவா வேண்டும். 

ஏற்கனவே, 'பிகில்' படத்தில் இருந்து 'சிங்கப்பெண்ணே' லிரிக்கல் பாடல் சமீபத்தில் வெளியாகி, அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. அதை தொடர்ந்து தற்போது 'வெறித்தனம் பாடல்' விஜய் குரலில் வெளியாகியுள்ளது. 

மேலும், இந்த படத்தின் தயாரிப்பாளர், அர்ச்சனா கல்பாத்தி இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் 'பிகில்' படம் குறித்து அவ்வப்போது, ஏதானும் தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கும் என, விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போட்டுள்ளார். 

தற்போது வெளியாகியுள்ள வெறித்தனம் பாடலின் லிரிக்கல் வீடியோ இதோ...
 
PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!