முதல்ல டைட்டில் சொந்தமா வை... தன்னை கலாய்த்த இயக்குனருக்கு வெங்கட் பிரபு பதிலடி!

Asianet News Tamil  
Published : Oct 19, 2017, 07:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
முதல்ல டைட்டில் சொந்தமா வை... தன்னை கலாய்த்த இயக்குனருக்கு வெங்கட் பிரபு பதிலடி!

சுருக்கம்

venkat prabu and director amuthan twitter fight

தமிழ் சினிமாவில் இசை மட்டும் இன்றி, தயாரிப்பு, இயக்கம், அரசியல்  என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து மிகவும் ஜாலியாக இருந்து வருபவர் கங்கை அமரன் மற்றும் அவருடைய மகன்கள், வெங்கட் பிரபு, பிரேம்ஜி.

தற்போது வெங்கட் பிரபு பார்ட்டி என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் சென்னை 28 படத்தில் நடித்த நடிகர்கள் நடித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் சிவா. தற்போது இவரைப் பற்றி பேசும் போது தான் ஒரு குட்டி சண்டையே வந்திருக்கிறது.

தற்போது சிவாவை வைத்து தமிழ்ப்படம் 2 எடுத்து வரும் இயக்குனர் அமுதன், ட்விட்டர் நடன இயக்குனர் கல்யாணுடன் உரையாடியுள்ளார். அப்போது கல்யாண், சிவாவிற்கு கொஞ்சம் உங்கள் படத்தில் இருந்து பிரேக் கொடுங்கள் என கூறியுள்ளார்.

இதற்கு அமுதன் இந்தப் படத்தில் நான் சிவாவை கமிட் செய்தபோதே இது பார்ட்டி மாதிரி சில்லி படம் இல்லை. நான் வெங்கட் பிரபு மாதிரி ஜாலியான இயக்குனரும் இல்லை என்று கூறித் தான் கமிட் செய்தேன் என்று தெரிவித்தார்.

இந்த உரையாடலைப் பார்த்த வெங்கட் பிரபு சைலண்டாக , முதலில் தலைப்பை சொந்தமாக வையுங்கள் என யாருக்கோ கூறுவதுபோல் கூறி அமுதனுக்கு செம மொக்கை கொடுத்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Dushara Vijayan : ஜில் பனியில் கூலாகும் துஷாரா விஜயன்... இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
Malavika Mohanan : பார்த்தாலே கிக்!! இறக்கமான சுடிதாரில் மாளவிகா மோகனின் நச் போஸ்..