
2001-ல், மாதவன் நடித்து சூப்பர் ஹிட் ஆன 'மின்னலே ' படத்தின் மூலம், துணை நடிகராக அறிமுகம் ஆனவர் நடிகர் வித்தார்த். இந்தப் படத்தை தொடர்ந்து பல படங்களில் துணை நடிகராக நடித்தார்.
சுமார் பத்து வருட போராட்டத்திற்கு பின் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய 'மைனா' படத்தின் மூலம், கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து அஜித்தின் வீரம் முதல் அண்மையில் வெளியான அன்பறிவு வரை முக்கியத்துவம் வாய்ந்த குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார் வித்தார்த்.
அந்த வகையில் இவர் நடித்த ஒரு கிடாயின் கருணை மனு, குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை, காற்றின் மொழி போன்ற படங்கள் பல்வேறு விருதுகளை பெற்றன. இவர் கதையின் நாயகனாக நடித்துள்ள கார்பன் என்கிற திரைப்படம் இன்று ரிலீசாகி உள்ளது. இத்தகையை உற்சாகமான தருணத்தை கொண்டாட முடியாத சூழ்நிலையில் இருக்கிறார் வித்தார்த்.
ஏனெனில், இவரது குடும்பத்தினர் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம். ஒரே நேரத்தில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் ஒரு சிலர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டும், மீதமுள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தமிழ் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.