“காட்மேன்” டீசரில் அப்படி என்ன தப்பிருக்கு?... சர்ச்சை தொடருக்கு ஆதரவாக சீறும் திருமா...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 5, 2020, 3:06 PM IST
Highlights

முழுமையாக அந்த தொடரை பார்க்காமல், கருப்பொருள் என்னவென்றே தெரியாமல், ஒரே ஒரு வசனத்தை வைத்து அந்த இணையதள தொடரையே ஒளிபரப்ப கூடாது என தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

ஜெய் பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள காட்மேன் வெப் சீரிஸின் டீசர் கடந்த வாரம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கிய இந்த வெப் தொடரை ஜீ5 தனது ஆன்லைன் தளத்தில் ஜூன் 12ம் தேதி ஒளிபரப்பவிருந்தது.பிராமண சமூகத்தினர் குறித்து சர்ச்சை வசனங்கள், உச்சகட்ட ஆபாச காட்சிகள், இந்து கடவுள்கள் மீதான நம்பிக்கையை அவமதிப்பது போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றிருந்ததால் சர்ச்சை வெடித்தது. 

அந்தணரை அவமதித்ததாகவும், இந்து மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்திவிட்டதாகவும் “காட்மேன்” தொடர் இயக்குநர், ஜீ5 நிர்வாகம் உள்ளிட்டோர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் இந்து மற்றும் பிராமண அமைப்பினர் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன. பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ள இந்த வெப் தொடரை தடை செய்ய வேண்டுமென ஜீ5 நிர்வாகத்திடமும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதை தொடர்ந்து, அந்த தனியார் தொலைக்காட்சியின் ஓடிடி தளத்தில் இருந்து, 'காட்மேன்' டீசர் அதிரடியாக நீக்கப்பட்டது. 

இதையும் படிங்க:  நடிகர் ஆர்யா மனைவி சாயிஷா கர்ப்பம்?... கோலிவுட்டில் தீயாய் பரவும் செய்தி...!

இதற்கிடையே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட போலீசார்,“காட்மேன்” தொடரின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதே போல் இந்த 'காட்மேன்' வெப் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள, நடிகர் டேனியல் பாலாஜி, ஜெய பிரகாஷ், மற்றும் சோனியா அகர்வால் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பிய இந்த தொடரை வெளியிடப்போவதில்லை என்று ஜீ நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நேற்று இரண்டாவது முறையாக காட்மேன் தொடர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு சம்மன் அனுப்பிய மத்திய குற்றப்பிரிவு போலீசார் நாளை ஆஜராகவிடில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

இதையும் படிங்க: 

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு நிமிடத்திற்கு மட்டுமே ஒளிபரப்பாகும் டீசரை கொண்டு, குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வசனங்கள் அமைந்துள்ளதாக கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதனால் அந்த டீசர் நீக்கப்பட்டுள்ளது. காட்மேன் வெப்சீரிஸை ஒளிபரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழுமையாக அந்த தொடரை பார்க்காமல், கருப்பொருள் என்னவென்றே தெரியாமல், ஒரே ஒரு வசனத்தை வைத்து அந்த இணையதள தொடரையே ஒளிபரப்ப கூடாது என தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் திணிக்கப்பட்டிருக்கும் அந்த தடையை நீக்க வேண்டும், தொடரை தயாரித்தவர்கள், நடித்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது”. 

இதையும் படிங்க: டீப் நெக் ஓபன்... டாப் ஆங்கிளில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... எல்லை மீறும் சாக்‌ஷி...!

“எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் திரைப்படங்கள் மற்ற பிற ஊடகங்கள் வாயிலாக காயப்படுத்த கூடாது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யாரையும் விமர்சிக்கலாம் என்ற நடைமுறையை விசிக ஆதரிக்கவில்லை. ஆனால் ஒரு நிமிட டீசரை வைத்து ஒட்டுமொத்த தொடருக்கே தடை விதிக்கும் படி புகார்கள் எழுந்துள்ளன. இது ஒருவகையான ஒடுக்குமுறை. முற்றிலுமாக இணையதள தொடருக்கு தடை விதித்திருப்பது ஏற்புடையதல்ல. இயக்குநர், நடிகர்கள், தயாரிப்பாளர் மீது அவதூறு பரப்புவது யார் என்பதையும் அடையாளம் காண வேண்டும். அப்படி மத உணர்வுகளை தூண்டிவிடுவோரை கண்டறிந்து கடுமையாக தண்டிக்க வேண்டும். அச்சுறுத்தும் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார். 

click me!