
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெகு விமரிசையாக கொண்டாடினர். அதற்கு முன்னதாக நீல நிற கோர்ட், சூட்டில் முறுக்கு மீசையுடன் திருமாவளவன் நடத்திய போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. செம்ம கெத்தாகவும், ஸ்டைலாகவும் போஸ் கொடுத்திருந்த திருமாவின் போட்டோக்கள் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டது.
நேற்று பிறந்தநாளை முன்னிட்டு விசிக தலைவர் திருமாவளவன் பிரபல சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் சினிமா மற்றும் அரசியல் குறித்த பல்வேறு கருத்துக்களை திருமாவளவன் வெளிப்படையாக பேசியுள்ளார். சார்பட்டா பரம்பரை பட விவகாரம் குறித்து பேசிய திருமாவளவன், சினிமா என்பது வெறும் பொழுது போக்கு கிடையாது. மக்களுடைய பிரச்சனைகளை எடுத்துரைக்க கூடியதாக இருக்க வேண்டும். தமிழில் மட்டுமல்ல உலக சினிமாக்கள் பலவும் அரசியல் மற்றும் கலாச்சாரம் குறித்து பேசுவதை சுட்டிக்காட்டினார்.
அப்போது தொகுப்பாளர் திருமாவளவனிடம் மாரி செல்வராஜ் அல்லது பா.ரஞ்சித் முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்துடன் உள்ள படத்தில் உங்களை நடிக்க அழைத்தால் ஒப்புக்கொள்வீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு சற்றும் தாமதிக்காத திருமாவளவன் நிச்சயமாக நடிப்பேன். எனக்கும் அதில் பொறுப்பு உள்ளது. அந்த மாதிரி ஒரு சூழ்நிலை அமைந்தால் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.