2011ல் நடைபெற்ற ரெய்டு..! ரூ.3 கோடி வரி ஏய்ப்பு..! நடிகர் சூர்யா சிக்கியது எப்படி?

By Selva KathirFirst Published Aug 18, 2021, 12:44 PM IST
Highlights

கடந்த 2011ம் ஆண்டு நடிகர் சூர்யா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை மட்டும் அல்லாமல் அவருக்கு சொந்தமாக கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்களிலும் ரெய்டு நடைபெற்றது. அதன் பிறகு இந்த சோதனை தொடர்பான செய்திகள் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. 

நடிகர் சூர்யா சுமார் நான்கு கோடி ரூபாய் வரை வரி கெட்டாமல் ஏய்ப்பு செய்திருப்பது சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு தெரியவந்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு நடிகர் சூர்யா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை மட்டும் அல்லாமல் அவருக்கு சொந்தமாக கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்களிலும் ரெய்டு நடைபெற்றது. அதன் பிறகு இந்த சோதனை தொடர்பான செய்திகள் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் சோதனை முடிந்த இந்த பத்து வருடங்களில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வளர்ந்துள்ளார். அஜித், விஜய்க்கு அடுத்து அதிக வசூலை கொடுக்கும் நடிகரின் படமாக சூர்யாவின் படங்கள் உள்ளன.

அதோடு மட்டும் அல்லாமல் அஜித், விஜய்க்கு இணையாக நடிகர் சூர்யா சம்பளமும் வாங்கி வருகிறார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கு மூலம் நடிகர் சூர்யா வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது. அதாவது சூர்யா ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், கடந்த 2007-2008 மற்றும் 2008-2009ம் ஆண்டுகளுக்கான தனது வருமான வரியை கணக்கிடுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு தான் பொறுப்பேற்க முடியாது என்றும் எனவே தான் செலுத்த வேண்டிய வரியான சுமார் 3 கோடியே 11 லட்சத்தை வட்டியோடு செலுத்த வேண்டும் என்கிற உத்தரவிற்கு தடை கோரினார்.

அதாவது வருமான வரிச்சட்டப்படி நிலுவைத் தொகைக்கு மாதம் 1 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். அந்த வகையில சூர்யா செலுத்த வேண்டிய ரூபாய் 3 கோடியே 11 லட்சம் ரூபாய்க்கு மாதம் 1 சதவீத வட்டி என சுமார் மூன்று வருடங்களுக்கான வட்டியை செலுத்த வருமான வரித்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நடிகர் சூர்யா தீர்ப்பாயம் சென்ற நிலையில் அங்கும் வரியை செலுத்த உத்தரவிட்டனர். இதனை அடுத்து சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரிக்கான வட்டி செலுத்த தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கு தான் அவருக்கு வில்லங்கமாகியுள்ளது.

பல வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதன் படி வருமான வரித்துறைக்கு நடிகர் சூர்யா வட்டியோடு தான் செலுத்த வேண்டிய மூன்று கோடியே 11 லட்சத்தை செலுத்த வேண்டும் என்று நீதிபதி எம்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டார். இதே நீதிபதி தான் நடிகர்கள் விஜய், தனுஷ் வாங்கிய சொகுசு கார்களுக்கு நுழைவு வரி செலுத்தவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவர்கள் செலுத்திவிட்டனர். ஆனால் நடிகர் சூர்யா தரப்போ, தாங்கள் ஏற்கனவே அந்த வருமான வரி நிலுவையான ரூபாய் 3 கோடியே 11 லட்சத்தை வட்டியோடு செலுத்திவிட்டதாகவும், வட்டிக்கு வட்டி என்கிற வருமான வரித்துறையின் உத்தரவை எதிர்த்தே நீதிமன்றம் சென்றதாகவும் சூர்யா தரப்பு தெரிவித்துள்ளது.

எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் சூர்யா தரப்பு கூறியுள்ளது. இதில் விஷயம் சூர்யா வட்டி கட்டுவதோ, கட்டாமல் இருப்பதோ இல்லை. கடந்த 2007-2008 மற்றும் 2008-2009ம் ஆண்டுகளில் முறையாக வருமான வரி செலுத்தாதது ஏன் என்பது தான். கடந்த சில வருடங்களாக மக்களுக்கு தான் ஒரு முன்னுதாரணம் என்கிற தோற்றத்தை உருவாக்கி வருகிறார். மேலும் மக்களை பாதிக்கும் மத்திய அரசின் சட்டங்கள், கொள்கைகளை சூர்யா மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். ஏழைகளை மீது அதிக கரிசனம் காட்டி வருகிறார்.ஆனால் இவர் ஏன் இரண்டு வருடங்களாக முறையாக வருமான வரி செலுத்தவில்லை. வருமான வரியே செலுத்தாமல் மக்களுக்கு அறிவுரை சொல்லவும், அரசை கேள்வி கேட்கவும் சூர்யாவுக்கு என்ன தகுதி உள்ளது என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

click me!