நீங்க நடிக்கவே வேண்டாம்... பிரபல நடிகையை ஓரம் கட்டிவிட்டு அஞ்சலியை ஓகே செய்த ஷங்கர்! ஏன் தெரியுமா?

Published : Aug 18, 2021, 11:26 AM IST
நீங்க நடிக்கவே வேண்டாம்... பிரபல நடிகையை ஓரம் கட்டிவிட்டு அஞ்சலியை ஓகே செய்த ஷங்கர்! ஏன் தெரியுமா?

சுருக்கம்

பிரபல நடிகையை ஓரம்கட்டிவிட்டு, இயக்குனர் ஷங்கர் ராம்சரண் படத்தில் அஞ்சலியை கமிட் செய்துள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணமும் இதுதானாம்.  

பிரபல நடிகையை ஓரம்கட்டிவிட்டு, இயக்குனர் ஷங்கர் ராம்சரண் படத்தில் அஞ்சலியை கமிட் செய்துள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணமும் இதுதானாம்.

இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்த 'இந்தியன் 2 ' திரைப்படத்தின் பஞ்சாயத்து ஒரு முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரயை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில், உருவாக உள்ள புதிய படத்தை பிரமாண்டமாக இயக்குகிறார் ஷங்கர். இந்த படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ள தில் ராஜு தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்கு முன்னதான ப்ரீ புரோடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.  தெலுங்கில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ராம்சரண், இந்த படத்தில்,  இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் அரசியல் தொடர்பான கதை என்றும் தகவல் கசிந்துள்ளது.

இப்படத்தில் ஏற்கனவே பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கமிட் ஆகியுள்ள நிலையில், மற்றொரு நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் அவரோ அதிக சம்பளம் கேட்டதுடன், படத்தில் நடிக்க பல கண்டிஷன்கள் போட்டுள்ளார். ஒருநிலையில் கடுப்பான இயக்குனர் ஷங்கர், அவரை நாசுக்காக ஓரம் கட்டிவிட்டு, தற்போது அஞ்சலியை நடிக்க வைக்க முடிவு செய்துவிட்டாராம்.  இதில் அஞ்சலி மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு வேடங்களில் நடித்து வரும் ராம் சரணின் ஒரு கதாபாத்திரத்திற்கு இவர் நாயகியாகவும் நடிக்கலாம் என்றும் டோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

இதற்கு முக்கிய முக்கிய காரணம், அஞ்சலியை விட  நடிகை ராஷ்மிகா  நடிப்பை மிகவும் எதார்த்தமாக வெளிப்படுத்துபவர்.  மேலும் சம்பளத்திலும் ராஷ்மிகா கேட்ட அளவிற்கு கேட்காதவர் என்பதால் தான் அஞ்சலியை தேர்வு செய்துள்ளாராம் ஷங்கர். மேலும் இந்த படத்தின்  அடுத்த மாதம் துவங்க உள்ளதாகவும், ஆறு மாதத்திலிருந்து ஏழு மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு போஸ்ட் புரோடக்ஷன் பணிகளை துவங்கி அடுத்த வருடத்திலேயே இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசைமைக்க உள்ளார்.  விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

4 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் பியூஸ் ஆன பாலய்யாவின் அகண்டா 2 - மொத்த வசூலே இவ்வளவு தானா?
நீலாம்பரி போல் திமிர் காட்டிய சாண்ட்ரா... படையப்பாவாக மாறி பதிலடி கொடுத்த கானா வினோத்..!