இயக்குநர் யார் என்பது முடிவாகுமுன்னே கதாநாயகி பெயரை வெளியிட்ட 'வர்மா’தயாரிப்பாளர்...காரணம் இதுதான்...

Published : Feb 16, 2019, 12:17 PM IST
இயக்குநர் யார் என்பது முடிவாகுமுன்னே கதாநாயகி பெயரை வெளியிட்ட 'வர்மா’தயாரிப்பாளர்...காரணம் இதுதான்...

சுருக்கம்

பாலா இயக்கி கைவிடப்பட்ட ‘வர்மா’ படத்தின் அடுத்த இயக்குநர் யார் என்பது கூட முடிவாகாத நிலையில் அதன் கதாநாயகி யார் என்பது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அப்பட தயாரிப்பாளர் முகேஷ் ஆர்.மேத்தா. படம் கைவிடப்பட்டதாக பலரும் பேசிவரும் நிலையில் விக்ரமின் வற்புறுத்தலுக்காகவே கதாநாயகியின் பெயர் அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது.

பாலா இயக்கி கைவிடப்பட்ட ‘வர்மா’ படத்தின் அடுத்த இயக்குநர் யார் என்பது கூட முடிவாகாத நிலையில் அதன் கதாநாயகி யார் என்பது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அப்பட தயாரிப்பாளர் முகேஷ் ஆர்.மேத்தா. படம் கைவிடப்பட்டதாக பலரும் பேசிவரும் நிலையில் விக்ரமின் வற்புறுத்தலுக்காகவே கதாநாயகியின் பெயர் அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது.

அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது. இந்தப் படம்தமிழில் வர்மா என்கிற பெயரில் ரீமேக் ஆனது. பிரபல இயக்குநர் பாலா இயக்கினார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக இப்படத்தின் மூலமாக அறிமுகமானார். வங்காள நடிகையான மேகா செளத்ரி, துருவ் ஜோடியாக நடித்தார். ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் ரைஸா போன்றோரும் இப்படபிப்ரவரி 14 அன்று வெளிவருவதாக இருந்த நிலையில் தயாரிப்பாளர் இயக்குநர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  வர்மா படம் திடீரென கைவிடப்பட்டது. 

இந்நிலையில் அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக்குக்கு அடுத்த இயக்குநர் யார் என்பதைக் கூட அறிவிக்காத நிலையில் புதிய கதாநாயகி தேர்வாகியுள்ளார். கடந்த வருடம் வெளியான ஹிந்திப் படமான ’அக்டோபர்’ படத்தில் அறிமுகமாகிக்கவனம் பெற்ற பனிதா சந்து கதாநாயகியாகத் தேர்வாகியுள்ளார். பனிதா, லண்டனில் பிறந்த பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப்படத்தை இயக்க தெலுங்கு ஒரிஜினல் இயக்குநர் சந்தீப் வங்காவையே தயாரிப்பாளர் கேட்டுக்கொண்ட நிலையில் அவர் இந்திப்படம் இயக்குவதில் பிசியாக இருப்பதால் அவரிடம்  உதவி இயக்குநராகப் பணியாற்றியகிரிஷய்யா என்பவர்  தமிழ் ரீமேக்கை இயக்குவார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்த அதிகாரபூர்வமான தகவலை தயாரிப்பாளர் இன்னும் வெளியிடவில்லை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025 ஆம் ஆண்டிற்கான டாப் 5 சிறந்த இயக்குனர்களின் பட்டியல்: First அண்ட் Last யார் தெரியுமா?
அஜித்தோடு மாப்பிள்ளை சார் சபரீசன்; சூடு வச்ச மாதிரி ஒரு கூட்டமே கதறுமே.? சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நக்கல்