
கல்லூரி கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்த நடிகை ஆண்ட்ரியா உள்ளாடைகள் தெரியும்படி மிகக் கவர்ச்சியாக உடை அணிந்து சென்றது வலைதளங்களில் பரபரப்பாகி வருகிறது. முகநூல் உட்பட்ட வலைதளங்களில் கல்லூரி நிர்வாகத்தை பொதுமக்கள் பயங்கரமாக கிண்டலடித்து வருகின்றனர்.
சமீபத்தில் வி ஐ டி கல்லூரியின் கலை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார் ஆண்ட்ரியா. அப்போது உள்ளாடை தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியான உடையில் சென்றிருந்தார். மாணவர்கள் மத்தியில் சிறிதுநேரம் உரையாடி, சில பாடல்களையும் பாடி உற்சாகப்படுத்திவிட்டுச்சென்றார் ஆண்ட்ரியா.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் ஆண்டிரியா வழக்கம்போல் அப்படங்களைப் பகிரவே, மாணவர்கள் படிக்கும் கல்லூரி நிகழ்ச்சிக்காவது கொஞ்சம் நாகரிகமாக உடை உடுத்திச் செல்லக்கூடாதா? கல்லூரிக்கு சென்றால் கூட இப்படித்தான் கவர்ச்சிப் படத்துக்கு ஆடை அணிவது போல் ஆடை அணிந்து செல்வதா என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.