நடிகை வரலட்சுமி சரத்குமார், வெற்றிகரமாக 25 படங்களை நடித்து முடித்துள்ளதற்கு, நன்றி கூறும் விதமாக தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு, நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார், வெற்றிகரமாக 25 படங்களை நடித்து முடித்துள்ளதற்கு, நன்றி கூறும் விதமாக தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு, நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... இது ஒரு நீளமான, கடினமான பயணமாக இருந்துள்ளது. நல்ல விஷயங்களை அடைவது அவ்வளவு சுலபமல்ல என்பார்கள். அது என் விஷயத்தில் உண்மை.
ஆனால் கனவுகள் கண்டிப்பாக ஒருநாள் நிஜமாகும். எனது சிறந்த திறனில் நான் வேலை செய்திருக்கிறேன். என் வாழ்க்கையில் இந்த கட்டத்தை எட்ட நான் பல சவால்களை சந்தித்து உள்ளேன்.
இப்போது நான் 25 படங்களை முடித்திருக்கிறேன். என்று நினைப்பது எனக்கு பெரிய அளவுகோலாக தெரிகிறது. என்ன நடந்தாலும், என்னுடன் நின்ற, என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். என் பக்கம் நின்று என் ஊக்கத்தை தடுத்த அவர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். ஏனென்றால் உங்கள் எதிர்மறை எண்ணம் தான் என்னை வலிமை ஆக்கியது.
உங்களை தவறென்று நிரூபிக்க இன்னும் பிடிவாதம் பிடிக்க வைத்தது. என்னை ஆதரித்து அன்பு காட்டிய என்னை வளர்த்த என் அன்பார்ந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என் மீது கட்டுப்பாடில்லாத நம்பிக்கை வைத்த என் அனைத்து இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.
நிறைய மகிழ்ச்சி, வெற்றி என என்னை ஆசிர்வதித்த கடவுளுக்கு நன்றி கூற விரும்புகிறேன். நல்லது கெட்டதுக்கு நடுவில் என்னுடனே இருந்து எனது ஒப்பனைக் கலைஞர் ரமேஷ் அண்ணாவுக்கும் என் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.
25 படங்களை முடித்ததும் நான் ஆசீர்வாதமாக உணருகிறேன். என்னுடன் இருந்த அனைத்து பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் என் நன்றி. என்றும், என் பணியில் சிறந்து விளங்க முயற்சித்தேன் எனது சிறந்த நடிப்பை தந்து உங்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை தர என்னை அர்ப்பணிப்பேன். தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள். காத்திருப்பவர்களுக்கு நல்லவை கிடைக்கும். தொடர்ந்து கனவு காணுங்கள் உங்களால் முடிந்த அத்தனை அன்பையும் மகிழ்ச்சியையும் பரப்புங்கள். என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய வெற்றி பயணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.