
பிரபல சின்னத்திரை நடிகை சேஜல் ஷர்மா வெள்ளிக்கிழமை, மும்பை மிரா சாலையில் உள்ள அவரது பிளாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பாலிவுட் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சேஜல் ஷர்மாவின் தற்கொலை சம்பந்தமாக காஷ்மீரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். அவருடன் பிளாட்டில் இருந்ததாகக் கூறப்படும் நண்பர்கள் உட்பட இரண்டு பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
26 வயதாகும் சேஜல் ஷர்மா, ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த, Dil Toh Happy Hai Ji என்கிற சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர்.
இவர் சமீபத்தில் நடித்து வந்த சீரியல் திடீர் என முடிந்ததால் சேஜல் மன அழுத்தத்தோடு காணப்பட்டதாகவும், இதை தவிர, சில பர்சனல் பிரச்சனைகளாலும், அவதி பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை, அவர் தங்கி இருந்த பிளாட்டில் 5 மணியளவில் சீலிங் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சேஜல் தற்கொலை குறித்து தெரியவந்ததும், அவருடைய நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது.
இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சேஜல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பயந்தரில் உள்ள பண்டிட் பீம்சன் ஜோஷி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து அவரது பெற்றோரிடம் சேஜல் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவர்கள் தங்களுடைய மகளை பார்த்து கதறி அழைத்தது அங்கிருந்தவர்கள் கண்களையே குளமாக்கியது... எனினும், இதை தவிர வேறு ஏதாவது சேஜலுக்கு பிரச்சனைகள் இருந்ததா, என போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.