
நடிகரும், பிரபல அரசியல் பிரமுகருமான சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி நடிப்பதில் மட்டும் அல்லாமல் சமூக சேவைகளிலும், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் கூட தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து அனைவர் முன்னிலையிலும் கூறினார். இது திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் இன்று சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அதில் வரலட்சுமி கடத்த பட்டது போல் வாயில் துணி கட்ட பட்ட நிலையில் படுத்துள்ளார். இத்தனை பார்த்த பல ரசிகர்கள் என்ன நடந்தது...? என அதிர்ச்சியாக கேட்டு வந்தனர்.
ஆனால், வழக்கம் போல் விஷயம் அறிந்தவர்கள் இது என்ன படத்தின் ப்ரோமோஷன்? என கேட்டு நகர, பிறகு வரலட்சுமியே இது ப்ரோமோஷன் தான் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.