பெண் சக்திகளை காக்கும் கவசம்... 'சேவ் சக்தி' வரலட்சுமி அதிரடி ... 

 
Published : Mar 03, 2017, 01:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
பெண் சக்திகளை காக்கும் கவசம்... 'சேவ் சக்தி'  வரலட்சுமி அதிரடி ... 

சுருக்கம்

varalakshmi create save sakthi accadamy

நடிகர் சரத்குமாரின் மூத்த மகளும்,  பிரபல நடிகையும்மான  வரலட்சுமி பெண் திரையுலக கலைஞர்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவதாகவும் அவர்களுக்காக தனி அமைப்பு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக  சமீபத்தில் தெரிவித்தார். 

இது குறித்து அவர் கூறியுள்ளது  நான் சமூக வலைத்தளம் ஒன்றில் போஸ்ட் ஒன்றை பதிவு செய்தேன். அந்த பதிவிற்கு நான் எதிர்பாராத அளவுக்கு வரவேற்பு இருந்தது . 

அப்பொழுதுதான் பல பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான அனுபவங்களை பெற்றுள்ளனர் என்று தெரியவந்தது. இதன் பின்னர் பெண் கலைஞர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று என தனக்கு  தோன்றியது எனவும் .
 
பின்னர் இதுகுறித்து நான் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து . 'சேவ் சக்தி'  என்கிற அமைப்பை உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.மேலும்  இந்த அமைப்பின் மூலம் மாநில அரசிடம் இரண்டு கோரிக்கைகள் வைக்க உள்ளோம். 

முதலாவதாக பெண்களுக்கு நேரும் குற்றங்களை விசாரிக்க என்று தனி நீதிமன்றம் தேவை. இந்த நீதிமன்றத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேரும் துன்பத்திற்கு எதிராக துணிந்து புகார் கொடுக்க வர முடியும். இரண்டாவது இந்த நீதிமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் நீதி கிடைக்க வேண்டும்.
 
இந்த இரண்டு விஷயங்களால் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நாம் நம்புகிறோம். அதேபோல் குற்றம் செய்யும் குற்றவாளிகளும் தண்டனை விரைவில் கிடைக்கும் என்பதை யோசித்து குற்றம் செய்ய தயங்குவார்கள்
 
மேலும் திரையுலகில் ஃபெப்சி என்ற அமைப்பும் அதற்கு கீழே ஒரு 24 அமைப்புகளும் உள்ளது. ஆனால் பெண்களுக்கு என ஒரு தனி அமைப்பு இல்லை. 

அந்த குறையை இந்த சேவ் சக்தி போக்கும். நடிகை மட்டுமின்றி துணை நடிகைகள், டான்சர்கள் என திரையுலகில் இருக்கும் அனனத்து பெண் கலைஞர்களுக்காகவும் இந்த சேவ் சக்தி உறுதுணையாக இருக்கும்' என்று வரலக்ஷ்மி கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ