அஜித் படத்தை திரையிட்டால் தீ வைத்து கொளுத்துவேன்...பிரபல நடிகர் ஆவேசம்...

 
Published : Mar 03, 2017, 12:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
அஜித் படத்தை திரையிட்டால் தீ வைத்து கொளுத்துவேன்...பிரபல நடிகர் ஆவேசம்...

சுருக்கம்

ajith movie release cancelled

கடந்த சில வருடங்களாகவே பிற மொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்து அங்கு திரையிடுவதற்கு அங்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் கன்னட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள்.

அதே போல் சமீபத்தில் மற்ற மொழி சீரியல்களை தமிழில் டப்பிங் செய்து திரையிட கூடாது என சின்னத்திரை கலைஞர்கள் போராட்டம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜித் நடிப்பில் கவுதம்மேனன் இயக்கிய சூப்பர் ஹிட் வெற்றி படமான 'என்னை அறிந்தால்' திரைப்படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு 'சத்யதேவ்' என்ற பெயரில் இன்று கர்நாடகத்தில் வெளியாகிறது.

ஆனால் டப்பிங் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஒரு குழுவினர் இன்று சத்யதேவ்' வெளியாகும் திரையரங்குகள் ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரபல கன்னட நடிகர் ஜக்கேஷ் என்பவர், 'சத்யதேவ்' படத்தை கர்நாடக திரையரங்குகளில் வெளியிடக்கூடாது என்று எச்சரித்துள்ளார். 

அதையும் மீறி வெளியிடும் தியேட்டர்களை தீயிட்டு கொழுத்துவேன் என்றும், அதற்காக சிறைக்கு செல்லவும் தயார் என்றும் கூறியுள்ளார்.  நடிகர் ஜக்கேஷின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ