
தெலுங்கு திரையுலகில் மிக முக்கிய பிரபலமான பாலகிருஷ்ணா அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் நடிக்க வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஹீரோவாகவே பார்க்கப்படுபவர் பாலகிருஷ்ணா. இவரது படங்களில் வரும், சண்டை காட்சிகள் விண்ணையே பிளக்கும் அளவிற்கு இருக்கும். அதிலும் கையை தட்டி ரயிலை நிறுத்துவது மாறும், இவர் பார்த்தாலே புயல் வருவது போல் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் வேற லெவலில் இருக்கும். அதே போல் தெலுங்கு ரசிகர்களால் இவருடைய படங்கள் அனைத்துமே தொடர்ந்து ரசிக்கப்படும் வருகிறது.
தன்னுடைய படத்தில் ஹீரோயின் யார் என்பதை கூட அவர் தான் முடிவு செய்வார். ஒருவேளை யாரவது இவருடைய படத்தில் நடிக்க முடியாது என மறுத்தால், அவர்கள் தெலுங்கு திரையுலகையே மறந்து விட வேண்டியது தான். அப்படி பார்த்தல், இவருடன் நயன்தாரா , த்ரிஷா, என தற்போதைய முன்னணி நடிகைகள் முதல், சினேகா, சிம்ரன், ப்ரியாமணி என அப்போதைய நடிகைகள் முதல் அனைவருமே நடித்து விட்டனர்.
இவர் அடுத்ததாக நடிக்க உள்ள 107 ஆவது படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, கோபிசந்த் மலினேனி என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி கமிட் ஆகியுள்ளாராம். வரலட்சுமி இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் வெளியான 'க்ராக்' என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு மிகவும் கவர்ந்ததால் இந்த படத்தில் பாலகிருஷ்ணாவே ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு வரலட்சுமி செட் ஆவார் என கூறியதால் வரலட்சுமி இந்த படத்தில் கமிட் செய்யப்பட்டதாக தெலுங்கு வட்டத்தில் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.