
1970களில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகை மஞ்சுளா, 1976 ஆம் ஆண்டு பிரபல நடிகர் விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார். இவர் விஜயகுமாரன் இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது, விஜயகுமாரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கன்னு, அவருக்கு பிறந்தவர்கள் தான், கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய்.
அதேபோல மஞ்சுளாவிற்கும் விஜயகுமாருக்கும் பிறந்த குழந்தைகள் தான் வனிதா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் ப்ரிதா விஜயகுமார் ஆகிய மூன்று பெண்கள். இவர்கள் மூவருமே நடிகைகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஒரு கட்டத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதா வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் அவரது தாய் மஞ்சுளா விஜயகுமார் மரணப்படுக்கையில் இருந்து அவரை நேரில் சந்தித்து பேசி சமாதானம் அடைந்ததாக சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் பேசிய வனிதா விஜயகுமார் கூறியது குறிப்பித்தக்கது.
நமது சொத்தில் உனக்கும் பங்கு உண்டு, அவர்கள் உன்னை ஏமாற்றி விடுவார்கள், ஆகையால் நான் இருக்கும் பொழுதே அவற்றை கேட்டு பெற்றுக்கொள் என்று தன் தாய் கூறியதாகவும், உன்னை விட எனக்கு சொத்து பெரிதல்ல என்று தான் தனது தாய் மஞ்சுளாவிடம் கூறியதாகவும் வனிதா கூறியிருந்தார்.
அதேபோல தனது தாய் உயிருடன் இருந்த பொழுது அவருடைய ஆசைக்கு தலையை அசைத்த தனது தந்தை விஜயகுமார் அவர்கள், தாயின் மறைவுக்குப் பிறகு தன்னை மீண்டும் ஒதுக்கி விட்டதாகவும் அவர் அந்த பதிவில் கூறி இருந்ததார்.
31 ஆண்டுகளுக்கு பின் இணையும் இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் இசைஞானி இளையராஜா!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.