
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வனிதா ஒரு நேர்காணலில் தெரிவிக்கும்போது கவின் லாஸ்லியா என அனைவர் பற்றியும் உண்மையை போட்டு உடைத்துள்ளார்
அப்போது, "நான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது நான் நானாகவே தான் இருந்தேன்... மற்றவர்களை பார்க்கும்போது அவர்கள் ஏற்கனவே சென்ற வருடம் வெளியான நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தால் இப்படித்தான் இருக்கவேண்டும் என தனக்குள் ஒரு மாய பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு நடக்கின்றனர்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் லாஸ்லியா ஒன்னும் அவ்வளவு அமைதியாக.. கோபப்படாத.. எப்போதும் சாந்தமாக சிரித்துக் கொண்டே இருக்கும் நபர் அல்ல.. கோபப்பட்டால் கத்தி பேசக்கூடிய ஆள் தான் அவர். ஆனாலும் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக அப்படியே நடிக்கின்றனர் என தெரிவித்தார்.
மேலும் கவினை பற்றி சொல்லும் போது, கவினின் காதல் விவகாரம் எல்லாம் சும்மா ஒன்றுமே கிடையாது... அவர் எதோ விளையாட்டுக்கு எல்லார்கிட்டயும் பேசிக்கொண்டே இருப்பார்.. அவ்வளவுதான். காதலாவது மண்ணாங்கட்டியாவது என குறிப்பிட்டுள்ளார் வனிதா. மேலும் இவர்கள் அனைவருமே மக்கள் மத்தியில், எப்படியாவது நல்லவங்க என்ற பெயரை எடுக்க வேண்டும் என்பதற்காக நடிக்கின்றனர் என தெரிவித்து உள்ளார் வனிதா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.