
உலக நாயகன் கமல ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் உரையாடும் நாட்களில், சாதாரண நாட்களை காட்டிலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.
குறிப்பாக இன்று யார், எவிக்ஷன் பட்டியலில் இருந்து காப்பாற்ற படுகிறார் என்கிற தகவல் தெரிய வரும்.
கடந்த மூன்று நாட்களாக, கவினின் முக்கோண காதல் கதை, பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. விளையாட்டாக செய்ய போய் அது தற்போது விபரீதத்தில் முடிந்துள்ளது.
தன்னுடைய தவறை எண்ணி, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முடிவையும் கவின் எடுத்தார் என்பது நேற்றைய நிகழ்ச்சியின் மூலம் தெரிந்தது. ஆனால் இன்று கவினின் மன நிலை எப்படி உள்ளது என்பது தெரியவரும்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், நடிகர் கமல் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. "மாத்தி மாத்தி பேசுறது, அணி மாறுவது... பிக்பாஸ் வீட்டுக்கு சகஜம் ஆகிட்டு ஆன இதுல எனக்கு பிடிச்ச விஷயம் என்னனா... ஆனா இது பதவி மோகத்துக்காக இல்ல... பீலிங்ஸ்காக என கூறி நினைத்தாலே இனிக்கும் என பாக்கெட்டில் இருந்து டைரி மில்க் ஒன்றை எடுத்து காட்டுகிறார்.
அந்த ப்ரோமோ இதோ:
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.