கட்டுன தாலிய கழட்டி வச்சிட்டு வருவாங்க... இது பெருசா தெரியுதா? சண்டை வாங்கும் வனிதா! ஓவியா ஸ்டைலில் பதிலடி கொடுத்த மது!

Published : Jul 02, 2019, 11:33 AM IST
கட்டுன தாலிய கழட்டி வச்சிட்டு வருவாங்க... இது பெருசா தெரியுதா? சண்டை வாங்கும் வனிதா! ஓவியா ஸ்டைலில் பதிலடி கொடுத்த மது!

சுருக்கம்

அபிராமி, முகேனுக்கு பிறந்த குழந்தை என ஒரு பாட்டிலை வைத்து கொண்டு, அதற்கு டயப்பர் போட்டு விளையாடிய சம்பவம் ஜாங்கிரி மதுவிற்கு, ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை என அவர் வெளிப்படையாக கூறியது மற்ற போட்டியாளர்களுக்கு உறுத்தலை ஏற்படுத்தியது.  

அபிராமி, முகேனுக்கு பிறந்த குழந்தை என ஒரு பாட்டிலை வைத்து கொண்டு, அதற்கு டயப்பர் போட்டு விளையாடிய சம்பவம் ஜாங்கிரி மதுவிற்கு, ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை என அவர் வெளிப்படையாக கூறியது மற்ற போட்டியாளர்களுக்கு உறுத்தலை ஏற்படுத்தியது.

இந்த பிரச்னை நடந்து முடிந்து விட்ட போதிலும், விடாப்பிடியாக சிலர் இந்த பிரச்சனையை பெரிது படுத்தி வருகிறார்கள். இதனால் மதுமிதா  மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டது, அவர் தனியாக அமர்ந்து, தனக்கு தானே பேசி கொண்டதில் இருந்தே தெரிந்தது.

ஆனால் உண்மையில், மக்கள் இதை ஒரு பிரச்சனையாகவே எடுத்து கொள்ளவில்லை. பிக்பாஸ் குடும்பம் மட்டுமே இதை ஒரு பிரச்சனையாக எடுத்து கொண்டு நாளுக்கு நாள் பெரிது படுத்தி வருகிறது. 

இதே பிரச்சனைக்காக இன்றும் பிக்பாஸ் வீட்டிற்குள் மோதி கொள்கிறார்கள் வனிதா மற்றும் மது. தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவை வைத்து பார்க்கையில் இந்த பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டது, வனிதா என தெரிகிறது.

இன்றைய புரமோவில் வனிதா "ஒண்ணுமே தெரியாம ஊமைக்குசும்பா இருப்பாங்களாம், கட்டின தாலியை கழட்டி வச்சுட்டு வருவாங்களாம், இவங்க அபிராமி பாட்டிலை குழந்தையா வச்சிருந்தா மட்டும் அதை தப்பா பேசுவாங்களாம்" என கூறுகிறார்.

இதற்கு மதுமிதா, 'இதே வாய்தான அன்னிக்கு ஆமாம், அபிராமி ஓவராத்தான் போறான்னு சொல்லுச்சு என பதிலடி கொடுக்க அதற்கு பதில் கூற முடியாத வனிதா வழக்கம்போல் பிரச்சனையை திசை திருப்பும் வகையில் 'உன்னோட ஒப்பினியனை உன்னோட வச்சுக்க மத்தவங்கள்கிட்ட திணிக்காதே என்று கூறி 'ஷட்டப்' என்று கூற அதற்கு மதுமிதாவும் 'நீங்க ஷட்டப் பண்ணுங்க' என்று ஓவியாவி ஸ்டைலில் கூறுகிறார்.

வனிதா அபி பற்றி பேசியதை, வெளிப்படையாக மது போட்டுடைத்ததால், அடுத்தடுத்து பிக்பாஸ் வீடு பிரச்சனைகளால் பற்றி  எரியும் என்பது மட்டும் தெரிகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!