Bigg Boss ultimate : என்னப்பா இது..வனிதாவையே கதற விட்டுட்டாங்களே..பொங்கி எழுந்த போட்டியாளர்கள்..

Kanmani P   | Asianet News
Published : Feb 14, 2022, 07:27 PM IST
Bigg Boss ultimate : என்னப்பா இது..வனிதாவையே கதற விட்டுட்டாங்களே..பொங்கி எழுந்த போட்டியாளர்கள்..

சுருக்கம்

Bigg Boss ultimate :  கேப்டன்ஷி டஸ்கில் முறையாக கண்ணைக்கட்டாமல் போங்காட்டம் ஆடியதாக மற்ற ஹவுஸ் மேட்ஸ் சொல்வதை ஏற்றுக்கொள்ளாத வனிதா ..பிகிபாஸ் இடம் கூறி கதறி அழுகிறார்..

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சி. தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ள இந்நிகழ்ச்சி தற்போது புதிய புதுப்பொலிவுடன் ஓடிடி-க்காக நடத்தப்படுகிறது. தமிழில் முதன்முறையாக இவ்வாறு நடத்தப்படுவதால், இதனை பிரபலப்படுத்தும் விதமாக இதற்கு முன் நடந்து முடிந்த சீசன்களில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்கள் 14 பேரை தேர்ந்தெடுத்து களமிறக்கி உள்ளனர்.

அதன்படி முதல் சீசனில் இருந்து சினேகன், ஜூலி, சுஜா வருணியும், இரண்டாவது சீசனில் இருந்து ஷாரிக்கும், தாடி பாலாஜியும், மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி, வனிதாவும், நான்காவது சீசனில் இருந்து அனிதா, பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தியும், 5-வது சீசனில் இருந்து நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இதில் சுரேஷ் சக்ரவர்த்தி (Suresh chakravathy), சுஜா வருணி (suja varunee) ஆகியோர் எலிமினேட் ஆகி உள்ளனர். 

மீதமுள்ள 12 பேருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று கேப்டன்சி டாஸ்க் நடைபெறும். இதில் வெல்லும் போட்டியாளர், அந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டின் தலைவராக இருக்க முடியும். அதுமட்டுமின்றி அவரை அந்த வாரம் முழுவதும் யாரும் எவிக்ட் செய்ய முடியாது.

அந்த வகையில் இந்த வாரத்துக்கான கேப்டன்சி டாஸ்கில் வனிதா (Vanitha) மற்றும் சுருதி (Suruthi) ஆகியோர் விளையாடுகின்றனர். கண்ணைக்கட்டிக் கொண்டு விளையாடும் இந்த விளையாட்டில் வனிதா போங்காட்டம் ஆடியதை ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கண்டுபிடித்து விடுகின்றனர். இதையடுத்து இருவரையும் மீண்டும் ஆட வைக்கலாம் என ஹவுஸ் மேட்ஸ் சொல்ல அதற்கு வனிதா, ஆட முடியாது என முரண்டு பிடிக்கிறார்.

இதுகுறித்த வாக்குவாதம் ஷாரிக் -வனிதா இடையே முற்றுகிறது..அதோடு  ஷாரிக் தைரியம் இருந்த முன்னாடி வந்து பேசும்மா என் ஒருமையில் திட்டுகிறார்.. இதனால் குழப்பமடையும் வனிதா பிக்பாஸ் சீக்ரெட் அறைக்கு சென்று பிக்பாஸிடம் தன எந்த தவறும் இழைக்காமல் கார்னர் செய்யப்படுகிறேன் என கூறி கதறி அழுகிறார்..இந்த காட்சிகள் அடங்கிய புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் ரசிகர்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களை கதி கலங்க செய்த டாப் 4 படங்களின் பட்டியல்!
கார்த்தி படத்தின் விதி; தள்ளிப்போகும் 'வா வாத்தியார்' ரிலீஸ்: முடிவில்லாத காத்திருப்பு; ஏமாற்றத்தில் ரசிகர்கள்!