யோகி பாபு படத்திற்கு வாணி ஜெயராம் பாடிய கடைசி பாடல்.! படக்குழுவினர் கண்ணீருடன் பகிர்ந்த தகவல்..!

Published : Feb 04, 2023, 09:15 PM ISTUpdated : Feb 04, 2023, 09:16 PM IST
யோகி பாபு படத்திற்கு வாணி ஜெயராம் பாடிய கடைசி பாடல்.! படக்குழுவினர் கண்ணீருடன் பகிர்ந்த தகவல்..!

சுருக்கம்

வாணி ஜெயராம், நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள, 'மலை' படத்தில் இடம்பெற்ற பாடலை பாடியுள்ளதாக படக்குழு கண்ணீருடன் அறிவித்துள்ளது.

பிரபல பழம் பெரும் பாடகி "பத்ம பூஷன்" விருது பெற்ற வாணி ஜெயராமின் திடீர் மறைவு தமிழ் சினிமா உலகிற்கும், இசை உலகிற்கும் பெரும் இழப்பு என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்..

இந்நிலையில் வாணி ஜெயராம் கடைசியாக சில படங்களில் பாடியிருந்தார் . அதில் இசையமைப்பாளர் D.இமான் இசையில் 'மலை' திரைப்படத்திற்கு பாடியது அவரின்  இறுதி திரை இசைப்பாடல் என கூறி கனத்த மனதுடன் படக்குழு இந்த தகவலை பகிர்ந்துள்ளது.

லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் யோகி பாபு , மற்றும் லஷ்மி மேனன் நடிப்பில் இந்த படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தின் இசை விழாவை  பெரும் விமரிசையாக நடத்தவும், "பத்ம பூஷன்". வாணி ஜெயராம் அவர்களை கவுரவிக்கும் விதமாகவும் தனிப்பெரும் பாராட்டு விழாவாகவும் நடத்த படக்குழுவினர்  திட்டமிட்டிருந்த நிலையில் , அவரின் திடீர் மறைவு படக்குழுவினருக்கு பெரும் சோகத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இமான் இசையில் அவர் பாடிய பாடல் உள்ளத்தை வருடும் படி வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும்,  இந்த பாடலை அவருக்கு காணிக்கையாக்குவதாகவும் படக்குழுவினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?
தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!