லைக்ஸை அள்ளும் 'வானம் கொட்டட்டும்' ஃபர்ஸ்ட் லுக்!... ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சரத்குமார் - ராதிகா!

Published : Nov 13, 2019, 07:37 PM IST
லைக்ஸை அள்ளும் 'வானம் கொட்டட்டும்' ஃபர்ஸ்ட் லுக்!... ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சரத்குமார் - ராதிகா!

சுருக்கம்

பிரபல இயக்குநர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் 'வானம் கொட்டட்டும்'. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உருவாகும் இந்தப் படத்தை, மணிரத்னத்தின் சிஷ்யர் தனா இயக்குகிறார்.   

ஹீரோவாக விக்ரம் பிரபு நடிக்க ஐஸ்வர்யா ராஜேஸ், மடோனா செபாஸ்டியன் என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சரத்குமார் - ராதிகா சரத்குமார் ஆகியோர் இணைந்து முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். 

அவர்களுடன் சாந்தனு பாக்கியராஜ், பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்களே களமிறங்கியுள்ளன. 'வானம் கொட்டட்டும்' படத்தின் மூலம் பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். 


சென்னை, திருநெல்வேலி, குற்றாலம் மற்றும் தமிழகத்தின் தென் பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.  தற்போது, படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வானம் கொட்டட்டும் ப்ரமோஷன் பணிகளை தயாரிப்பு தரப்பு தொடங்கியுள்ளது.


அதன் ஒருபகுதியாக, முதலில் 'வானம் கொட்டட்டும்' படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்ட படக்குழு, அடுத்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நவம்பர் 13ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. 

சொன்னபடியே, 'வானம் கொட்டட்டும்' படத்தின் கிளாசிக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வயதான தம்பதியர் தோற்றத்தில் சரத்குமார் - ராதிகாவும், அவர்களது பிள்ளைகளைப் போன்று விக்ரம் பிரபு - ஐஸ்வர்யாவும் இருப்பது போன்ற இருவிதமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் லைக்சை அள்ளி வருகிறது. 

நீண்ட காலத்திற்குப் பிறகு சரத்குமாரையும், ராதிகாவையும் வெள்ளித்திரையில் பார்க்க ஆவலுடன் உள்ளதாக ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திற்கும் வரவேற்பால் உற்சாகமடைந்துள்ள படக்குழு, சித்ஸ்ரீராமின் இசையில் உருவாகியிருக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் பாடல்களை விரைவில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!