
Director NT Nanda Created AI Music Album : தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இன்றைய காலகட்டத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. சினிமாவிலும் ஏஐ பயன்பாடும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் வல்லதேசம் படம் மூலமாக பிரபலமான இயக்குநர் என்டி நந்தா ஏஐ மூலமாக இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் எழுத்தாளரான என் டி நந்தா தற்போது ஏ ஐ இசை ஆல்பம் மூலமாக இசையமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.
சினிமா மீது கொண்ட ஆர்வம், சினிமா துறை மீதான காதல் ஆகியவற்றின் காரணமாக படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி மற்றும் பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் திரைப்படத் தயாரிப்பு, சவுண்ட் என்ஜினியரிங், மற்றும் மியூசிக் டெக்னாலஜி ஏஐ ஆகிய துறைகளில் கல்வி பயின்றுள்ளார்.
தமிழ் திரைப்படத்துறையில் இயக்குநராகத் திரையுலகுக்கு அறிமுகமான இவர், 2017-ல் வெளிவந்த “வல்ல தேசம்” எனும் அதிரடித் திரில்லர் திரைப்படத்தின் மூலம் பரவலான பாராட்டுகளைப் பெற்றார். இந்த படத்தில் அவர் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் ஒளிப்பதிவாளர் (DoP) எனப் பல பொறுப்புகளை ஏற்று தனது பன்முகத் திறமையையும் நிரூபித்துள்ளார்.
தற்போது முழுக்க முழுக்க எந்த ஒரு பங்கேற்பாளரும் இல்லாமல், தானே இசையமைத்து, பாடல் எழுதி ஏஐ மூலம் விஷுவல்களை உருவாக்கி, இந்த புதிய வீடியோ ஆல்பம் பாடலை உருவாக்கி அசத்தியிருக்கிறார். “என் உயிரின் ஓசை நீயே” எனும் இப்பாடல் ஒரு பெண்ணின் பார்வையில் காதலின் ஏக்கத்தை, வலியை இன்பத்தை வெகு அழகாகச் சொல்கிறது. இப்பாடல் You Live Only Once எனும் பெயரில் சிற்சில மாற்றங்களுடன் ஆங்கில வடிவிலும் உருவாகியுள்ளது. தமிழ்ப்பாடலை, சீர்காழி சிற்பி எழுதியுள்ளார். தற்போது இந்த இசை ஆல்பம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது, நந்தா “120 ஹவர்ஸ்” எனும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் வரும் 2025 ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.