Valimai Third Single : அஜித் ரசிகர்களுக்கு அடுத்த விருந்து ரெடி... இன்று வெளியாகவுள்ள மாஸ் அப்டேட்...

Kanmani P   | Asianet News
Published : Dec 19, 2021, 11:23 AM IST
Valimai Third Single : அஜித் ரசிகர்களுக்கு அடுத்த விருந்து ரெடி... இன்று வெளியாகவுள்ள மாஸ் அப்டேட்...

சுருக்கம்

Valimai Third Single update expected today : இன்று அஜித்தின் வலிமை படத்திலிருந்து மூன்றாவது பாடலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அஜித்தின் வலிமை படம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதிகம் எதிர்பார்ப்புகளை கொடுத்த படமாகும். இந்த படத்தின் அப்டேட்டை வெளியிட வேண்டும் என அஜித் ரசிகர்கள் பெரிய போராட்டத்தையே செய்து விட்டனர். பிரதமர் முதல் விளையாட்டு வீரர் வரை அனைவரிடமும் வலிமை அப்டேட் குறித்து கோரிக்கை விடுத்து விட்டனர் அஜித் ரசிகர்கள். இது குறித்து ரசிகர்களை கண்டித்திருந்தார் தல அஜித்.

வலிமை படபிடிப்பு முழுதும்  சில மாதங்களுக்கு முன் நிறைவு செய்யப்பட்டது. இதனால் விஸ்வாசம் - பேட்ட போன்று ரஜினி படமும், அஜித் படமும் தீபாவளிக்கு மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படம் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டது. பின்னர் 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். ஆனால் தேதி என்னவென்று அவர் உறுதியாக்கவில்லை.

இதை தொடர்ந்து தல பொங்கல் என சொல்லி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  இதற்கிடையே  இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பைக் டிரிப் சென்று விட்டு, தீபாவளிக்கு தான்  அஜித் திரும்பி வந்தார். இது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்களை ரசிகர்கள் வைரலாக்கினர்.

சட்டவிரோதமாக பைக் ரேஸில் ஈடுபடும் கேங்கை வளைத்து பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக தான் வலிமை படத்தில் அஜித் நடித்துள்ளார் என ஏற்கனவே கூறப்பட்டு விட்டது.  

இதற்கிடையே வலிமை படத்திலிருந்து முதல் சிங்கிளாக "நாங்க வேற மாறி " சாங் ரிலீஸ் ஆகி மாஸ் ஹிட்டடித்தது. இந்த பாடலை தல ரசிகர்கள் வெறித்தனமாக ட்ரெண்டாக்கி வந்தனர். இந்நிலையில் படத்தின் செகண்ட் சிங்கிளுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்துள்ளது. 

ஏற்கனவே தயாரிப்பாளர் கூற்றுப்படி வலிமை வரும் ஜனவரியில் ரிலீஸாக இருப்பதால் இந்த மாதம் முழுவதும் வலிமை கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரங்களில் வலிமை படத்தின் பாடல்கள், டீசர்,டிரெயிலர் என மாஸ் அப்டேட் கிடைக்கும் என்னும் உற்சாகத்தில் இருக்கும் தல விருந்தாக கடந்த வாரம் வெளியான வலிமை செகண்ட்  சிங்கிள் மாதர் சாங் இதுவரை வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது சிங்கிளுக்கான ப்ரோமோ இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான ஹேஸ் டேக் ட்வீட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்