ஹெல்மட் அவசியத்தை வலியுறுத்து நடு ரோட்டில் நோட்டிஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்! குவியும் பாராட்டு!

By manimegalai aFirst Published Aug 24, 2019, 5:36 PM IST
Highlights

'தலை கவசம் உயிர் கவசம்' என சாலைகள் தோறும், எழுதப்பட்டிருந்தாலும். ஹெல்மட் அணிவதின் அவசியத்தை, சாலை போக்குவரத்து போலீசார் ஒவ்வொருவாரா நிறுத்தி அட்வைஸ் செய்தாலும், இளம் கன்று பயமறியாது என்கிற பழமொழிக்கு ஏற்ப, பல இளைஞர்கள்  இதனை சற்றும் மதிப்பது இல்லை.
 
இதனால், ஹெல்மட் அணிந்து வாகனம் ஓட்டாமல் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு, அபராத தொகை 100  ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 1000  ரூபாய் அபராதம் கட்ட பயந்து பலர் பயந்து பயந்து செல்வத்தையும் பார்க்க முடிகிறது.

வாகனம் ஓட்டுபவர் மட்டும் அல்லது பின்னல் அமர்ந்து செல்பவரும் ஹெல்மட் அணிய வேண்டும் என்றும், அவர்களுக்கும் இந்த அபராத தொகை பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹெல்மட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி, பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடிய பிரபல கமெடிய நடிகர் வையாபுரி, இன்று விருகம்பாக்கம் சாலையில் உள்ள போக்குவரத்து அலுவலகம் அருகே நோட்டீஸ் கொடுத்து ஹெல்மட்டின் அவசியத்தை விளக்கி கூறினார். 

இவரின் செயலுக்கு பலர் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

click me!