மணம் நிகழ்வதைவிட... குணம் நிகழ்வதே மங்கலமல்லவா? கொரோனா நோயாளிகளுக்கு உதவ காத்திருக்கும் வைரமுத்து!

Published : May 08, 2021, 01:22 PM IST
மணம் நிகழ்வதைவிட... குணம் நிகழ்வதே மங்கலமல்லவா? கொரோனா நோயாளிகளுக்கு உதவ காத்திருக்கும் வைரமுத்து!

சுருக்கம்

இந்நிலையில், வைரமுத்து திருமண மண்டபங்களை கொரோனா நோயாளிகள் மருத்துவமனையாக மாற்றுவதாக இருந்தால், தன்னுடைய திருமண மண்டபத்தை முதல் ஆளாக தருவதாக கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது, இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, முழு ஊரடங்கு உதவரை முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். இந்நிலையில், வைரமுத்து திருமண மண்டபங்களை கொரோனா நோயாளிகள் மருத்துவமனையாக மாற்றுவதாக இருந்தால், தன்னுடைய திருமண மண்டபத்தை முதல் ஆளாக தருவதாக கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பிப்ரவரி மாதக் கடைசியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளொன்றுக்கு 450 தாக இருந்த நிலை மாறி, தற்பொழுது நாளொன்றுக்கு  26,000 -க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.   மேலும் 23-க்கும்  மேற்பட்ட  மாவட்டங்களில் நோய்த்தொற்று     உறுதியாகும்     எண்ணிக்கை     நாளொன்றுக்கு     10 விழுக்காட்டிற்கும்  மேல்  உள்ளது.  எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைவாக செயல்பட்டு மக்களை கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

குறிப்பாக, தற்போது தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான போதிய படுக்கை அறைகள் இருந்தாலும்... ஒருவேளை திருமண மண்டபங்களை கொரோனா மருத்துவமனையாக மாற்றும் நிலை ஏற்பட்டால், முதல் ஆளாக உதவுவதாக கூறியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது... 
"திருமண மண்டபங்களைத்
தற்காலிக மருத்துவ மனைகளாக
மாற்றுவதற்குத்
தமிழக அரசு முடிவெடுத்தால்,

முதல் மண்டபமாக
எங்கள் 'பொன்மணி மாளிகை' 
திருமண மண்டபத்தை
மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம்.

மணம் நிகழ்வதைவிட
குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?" என தெரிவித்துள்ளார்.

வைரமுத்தின் இந்த பதிவிற்கு பல்வேறு தரப்பை சேர்ந்தவர்களும் தங்களுடைய பாராட்டை தெரிவித்து வருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?