கொஞ்சம் தள்ளி நில்லும்மா ! பயமா இருக்கு… மேடையில் பயந்து பம்மிய வைரமுத்து !

Published : Aug 20, 2019, 09:06 AM ISTUpdated : Aug 20, 2019, 09:24 AM IST
கொஞ்சம் தள்ளி நில்லும்மா ! பயமா இருக்கு… மேடையில் பயந்து பம்மிய வைரமுத்து !

சுருக்கம்

சென்னையில் கதாசிரியர் கலைஞானத்துக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, தனது அருகில் நின்ற நிகழ்ச்சி பெண் தொகுப்பாளரைப் பார்த்து, கொஞ்சம் தள்ளி நில்லும்மா… பயமா இருக்கு என்று சொல்லியது அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

கடந்த ஆண்டு மீ டு விவகாரத்தில் சிக்கி சின்னாபின்னமானார் கவிஞர் வைரமுத்து. குறிப்பாக பாடகி சின்மயி , வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார் என்று டுவிட்டரில் பற்ற வைத்தார். இதைத் தொடர்ந்து திரையுலகத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் வைரமுத்து மீது வரிசை கட்டி பாலியல் புகார் தெரிவித்தனர்.

பாடகி சின்மயி தொடர்நது பல மாதங்கள் அவரை விடாமல் துரத்தி துரத்தி பாலியல் புகார் தெரிவித்ததோடு முடிந்த அளவு கவிஞர் வைரமுத்துவின் பேரை டேமேஞ் செய்தார். வைரமுத்துவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் புகார் எழுந்தது. அந்த நேரத்தில் இயக்குநர் பாராதி ராஜா மட்டுமே வைரமுத்துவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக திரையுலகில் ஒரு இறுக்கம் நிலவியது.

இதையடுத்து கவிஞர் வைரமுத்து பல மாதங்கள் பொது வெளியில் தலை காட்டாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் சென்னையில் கதாசிரியர், தயாரிப்பாளர் கலைஞானத்துக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதனை இயக்குநர் பாராதிராஜா ஏற்பாடு செய்திருந்தார். நடிகர் ரஜினிகாந்த் இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார். அப்போது எம்ஜிஆர், சிவாஜி போன்றோருக்கு பாராட்டு விழா எடுத்த பாரதிராஜாவுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கும் பாராட்டு விழா நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

அவர் பேசிக் கொண்டிருந்தபோது அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளர் ஒருவர் வைரமுத்துவின் அருகில் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்து கொஞ்சம் தள்ளி நில்லுமா… எனக்கு அச்சமாக இருக்கு என கூறினார். உடனடியாக அந்தப் பெண் சற்று நகர்ந்து நின்று கொண்டார்.

அப்போது அந்த அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது. ஆனாலும் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் அவர் சொன்னவிதம் தவறு என்று  பலரும் தெரிவித்தனர். இதை சின்மயி பார்த்தாரா ? பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் பேசுபவர்கள் பார்த்தார்களா ? இது ஒரு பிரச்சனையாக வெடிக்குமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ்நாடே அலற போகுது; வரலாறு படைக்க வருகிறான் – அனல் தெறிக்கும் ‘ஜன நாயகன்’ 2-வது சிங்கிள் புரோமோ!
'கையெடுத்து கும்புடுறேன்;இப்படி செய்யாதீர்கள்' - ஸ்ரீலீலா மனம் திறந்து வேண்டுகோள்!