
அழகிய குரலால் ஒட்டு மொத்த தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களில் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் பாடகி வைக்கோம் விஜயலட்சுமி.
அண்மையில் இவருக்கும் சந்தோஷ் என்கிற இசையமைப்பாளருக்கு சில நாட்களுக்கு முன்பு பெரியோர்கள் ஆசியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதே போல் இவர்களுடைய திருமணம் மார்ச் 29ம் தேதி என்றும் கூறியிருந்தனர்.
திருமணம் நிச்சயம் செய்ய பட்ட சந்தோஷத்தை போலவே இவருக்கு கண் பார்வையும் கிடைத்தது.
ஆனால் தற்போது இவர்களுடைய திருமணம் நின்று விட்டதாக தெரிவித்துள்ளனர் இவருடைய பெற்றோர்கள் . இதுகுறித்து விஜயலட்சுமியின் அப்பா கூறும்போது, நாங்கள் திருமணத்தை நிறுத்திவிட்டோம் என்றும் .
சந்தோஷ் திருமணத்திற்கு பிறகு விஜயலட்சுமியுடன் தங்கள் வீட்டிலேயே இருப்பதாக ஒப்புக் கொண்டார் . ஆனால் தற்போது அப்படி இருக்க முடியாது என்றும், திருமணத்திற்கு பிறகு விஜய்லட்சுமி பாட கூடாது என்றும் கூறியதால் தற்போது திருமணம் நிறுத்த பட்டடதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.