
உலக தமிழ் பல்கலை கழகம், பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
தனது வசீகர குரலால் மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி.
கடந்த 2013-ல் மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான “செல்லுலாய்ட்” படத்தில் “காற்றே காற்றே” என்ற பாடல் மூலம் தனது காந்தக் குரலால் புகழ் பெற்றவர். இவர், தமிழிலும் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். “சொப்பனசுந்தரி நான் தானே” பாடல் இவர் பாடியதுதான்.
கண்பார்வை அற்றவரான இவர், சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என நிரூபித்துள்ளார். சமீபத்தில் கூட கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொடர்ந்து ஐந்து மணி நேரம் இடைவிடாமல் காயத்ரி வீணை மூலம் பாடல்களை பாடி புதிய சாதனையை படைத்துள்ளார்.
இசையுலகில் இவரது சாதனைகளைப் பாராட்டி இவருக்கு அமெரிக்காவை சேர்ந்த உலக தமிழ் பல்கலை கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்க முடிவுசெய்தது. அதன்படி, இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
மலையாளம், தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் அவர் 67 பாடல்கள் பாடியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.